தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான தி கிரே மேன் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சிறு கேரக்டரில் நடித்திருந்தாலும் தனுஷின் நடிப்பு பாராட்டுகளை பெற்று வருகிறது. ஆனாலும் சமீப காலமாக அவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறுவதில்லை.
அந்த வகையில் ஜகமே தந்திரம், மாறன், போன்ற திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. ஆனால் அந்த திரைப்படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் தோல்வி படங்களாகவே அமைந்தது. இதனால் தனுஷ் எப்படியாவது ஒரு வெற்றி படத்தை கொடுத்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
தற்போது அவரின் நடிப்பில் வெளியாக இருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தை தான் அவர் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தனுஷின் இந்த தொடர் தோல்விகளுக்கு அவருடைய விவாகரத்து தான் காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. தனுஷ் திரையுலகில் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
இது எதார்த்தமாக நடந்ததா அல்லது திட்டமிடப்பட்டதா என்று பலருக்கும் புரியவில்லை. ஆனாலும் அவரைப் பற்றி பல்வேறு செய்திகளும், விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது. அதாவது இனிமேல் அவர் படம் தியேட்டரில் வெளிவந்து ஓடினால் தான் தனுஷின் திரை வாழ்வை கணிக்க முடியும் என்று கூறுகின்றனர்.
மேலும் தனுஷின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் இருப்பதற்கு பின்னால் என்ன காரணம் இருக்கிறது என்ற ஒரு கேள்வியும் எழுந்து வருகிறது. ஒரு வேலை அவருடைய படங்களை தியேட்டரில் வெளியிட அனுமதி மறுக்கப்படுகிறதா என்ற ஒரு சந்தேகமும் ரசிகர்களுக்கு வலுக்கிறது.
எது எப்படி இருந்தாலும் விரைவில் வெளியாக இருக்கும் திருச்சிற்றம்பலம் படம் அனைத்துக்கும் ஒரு பதிலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தனுஷின் ரசிகர்கள் இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.