என்னை நோக்கி பாயும் தோட்டா – தோல்வியை ஒப்புக்கொண்ட கௌதம் மேனன்.. ஓப்பனாக கூறிய காரணம்!

ரசிகர்களின் இதயத்தை தொலைக்காமல் சென்றது “என்னை நோக்கி பாயும் தோட்டா”. பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’.

இந்த படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் சிறப்பு தோற்றத்தில் சிவக்குமார் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். காதல், அண்ணன் தம்பி சென்டிமென்ட் என்று இரு முகங்களை கொண்டது இத்திரைப்படம் .

தனுஷ் ஒரு இன்ஜினியரிங் மாணவனாக இருக்கிறார். அந்த கல்லூரிக்கு படப்பிடிப்பிற்காக வரும் கதாநாயகி மேகா ஆகாஷ் பார்த்து காதலில் விழுகிறார், தனுசை பிடித்து விடுகிறது. இருவரும் காதலித்து வருகின்றனர்.

ennai-nokki-paayum-thotta
ennai-nokki-paayum-thotta

இந்நிலையில் தனுஷ் அண்ணனான சசிகுமார் இளம் வயதிலேயே காணாமல் போகிறார். அவரை எவ்வாறு தனுஷ் காப்பாற்றுகிறார், என்பது தான் படத்தின் கதை சுருக்கம். இவ்வாறு சுவாரஸ்யமும், சென்டிமென்ட், காதல் என்று அனைத்தும் நிறைந்திருந்த நிலையிலும், இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

கௌதம் மேனன் படம் என்றாலே பிரம்மச்சாரிக்கும் காதல் வரும் அளவிற்கு அவருடைய காதல் காட்சிகள் அமைந்திருக்கும். ஆனால் இந்த திரைப்படத்தில் கௌதம் மேனனின் முக்கிய காட்சிகள் தவறி இருந்தன.

மேலும் புதிய நுட்பமாக “வாய்ஸ் ஓவர்” செய்திருப்பது மக்களிடையே அதிக அளவு வரவேற்பை பெறவில்லை. படம் முழுவதும் வாய்ஸ் ஓவர் செய்திருப்பது ஒரு கட்டத்தில் ரசிகர்களிடையே அதிருப்தியை மற்றும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதுவே இத்திரைப்படம் வெற்றி பெறாததற்கு காரணமாக அமைந்தது.

- Advertisement -