உலக நாயகனை நைசாக கழட்டி விட்ட தனுஷ்.. இளையராஜாவுக்காக சதிராட்டம் ஆடும் அசுரன்

Dhanush ditched the world hero for Ilayaraja: தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக பல வெற்றி படங்களை கொடுத்து வரும் தனுஷிற்கு கைவசம் குபேரா, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் புதுப்பேட்டை 2 என பல படங்கள் உள்ளது.

இருந்த போதும் இளையராஜாவின் பயோபிக்கை எடுத்தே தீருவேன் என கங்கணம் கட்டி உழைத்து வருகிறார். இதில் இளையராஜாவாக நடிப்பதும் தனுஷ் தான்.

இந்த பயோபிக்கை பாலிவுட் இயக்குனர் பால்கி எடுப்பதாக இருந்தது. அது முடியாமல் போகவே, தனக்கு விருப்பமான இயக்குனர்களை இளையராஜாவிடம் அனுப்பி வைத்து இயக்குனரை தேர்ந்தெடுக்க சொன்னாராம்.

அதில் கேப்டன் மில்லர் படம் இயக்கிய அருண் மாதேஸ்வரனை பிடித்து போக அவரை இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இயக்குனரை பெயரளவு செட் செய்து முழு கண்ட்ரோலையும் தன் பக்கம் எடுத்துக் கொண்டார் தனுஷ். அதுமட்டுமின்றி இளையராஜாவின் மேற்பார்வையில் தான் அனைத்து வேலைகளும் நடைபெறுகிறது.

இதனால் இளையராஜாவின் கஷ்ட நஷ்டங்கள் மட்டுமே வெளிப்படுமே தவிர , உண்மைகளும் சர்ச்சைகளும் வெளிவர வாய்ப்பு இல்லை என்பது தகவல்.

இதில் இளையராஜாவின் பயோபிக் என்பதால் உலக நாயகனை வைத்து திரைக்கதை எழுத சொன்னார்களாம். இது தனுஷிற்கு பிடிக்கவில்லை என்பது போல் தெரிகிறது.

இளையராஜாவின் திரைக்கதையை அபகரித்து கொண்ட தனுஷ்

கமல் திரைக்கதை எழுதினால் அது மேம்பட்ட கதையாக இருக்கும், ஒரு சிலருக்கு புரிவது கடினமாக இருக்கும் என பல எக்ஸ்ட்ரா பிட்டுகளை போட்டு கமலையும் ஓரங்கட்டினார் தனுஷ்.

இப்பொழுது கதை, திரைக்கதை, இயக்கம் என முழு கண்ட்ரோலும் தனுஷின் வசமானது. இளையராஜா பயோபிக்ன்னா சும்மாவா..?

இப்படத்தின் மூலம் பெயர், புகழ், வசூல் என ஒரு சேர பெற்றுக்கொள்ளலாம் என்கின்ற மிதப்பில் பல அண்டர்கிரவுண்ட் வேலைகளை செய்து வருகிறார் தனுஷ்.

சமீபத்தில் வெளிவந்த படத்தின் போஸ்டரையே, விமர்சனம் என்கின்ற பெயரில் கிழித்து தொங்க  விட்டனர் தனுஷின் நல விரும்பிகள். இன்னும் படத்தை என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறார்களோ..?

 

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய செய்திகள்