பாலிவுட் முதல் டோலிவுட் வரை 100 கோடி வசூலித்த தனுஷ்.. பான் இந்தியா பயத்தை காட்டிய கேப்டன் மில்லர்

சுள்ளானாக சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்து பல கேலி கிண்டல்களுக்கு ஆளான தனுஷ், தற்போது  இந்திய திரையுலகில் அசைக்க முடியாத அசுரனாக வளர்ந்து நிற்கிறார். முதலில் தமிழில் மட்டும் கலக்கிக் கொண்டிருந்த தனுஷ் அதன் பிறகு பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என தற்போது எல்லா மொழிகளிலும் வெரைட்டி கட்டிக் கொண்டிருக்கிறார்.

அதிலும் தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் 100 கோடிக்கு மேல் கோலிவுட்டில் மட்டுமல்லாமல் பாலிவுட், டோலிவுட்டிலும் வசூலித்ததை பார்த்து பலரும் வாய் மேல் கை வைத்துள்ளனர். அதிலும் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாக்கிக் கொண்டிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் பிரம்மாண்டமான பொருட்செலவில் பான் இந்திய படமாக பயம் காட்ட, வேற லெவலில் தயாராகிக் கொண்டிருக்கிறது.

Also Read: தலைக்கு ஏரிய மம்மதை.. சூப்பர் ஹிட் கொடுத்த புகழ் போதையில் ஹெட் வெயிட் காட்டும் தனுஷ் பட இயக்குனர்

இதற்கு முன்பே தனுஷ், சோனம் கபூர் நடிப்பில் வெளியான பாலிவுட் படமான ராஞ்சனா படத்தின் மூலம் 100 கோடிக்கு மேல் வசூலித்து ஹிந்தி பிரபலங்களுக்கு தண்ணி காட்டினார். இந்தப் படம் தமிழில் அம்பிகாபதி என்கின்ற டைட்டில் ரிலீஸ் ஆனது. மேலும்  கோலிவுட்டில் தனுஷின் அசுரன் மற்றும் திருச்சிற்றம்பலம் அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் வெளியான வாத்தி போன்ற மூன்று படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல் ஆனதும் குறிப்பிடத்தக்கது. 

அதிலும் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இரண்டு மொழிகளில் உருவான தனுஷின் வாத்தி திரைப்படம் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி  ரிலீஸ் ஆனது. இந்த படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இதில் தனுஷ் பாலமுருகன் என்கின்ற கதாபாத்திரத்தில் ஆசிரியராக தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.

Also Read: அடி உதவுவது போல் அண்ணன், தம்பி உதவ மாட்டாங்க.! விஜய்யை பார்த்து கூட திருந்தாத சிவகார்த்திகேயன், தனுஷ்

இந்த படத்திற்கு தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்து 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இவ்வாறு 30 கோடி பட்ஜெட்டில் உருவான வாத்தி திரைப்படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா என பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஆனால் தனுஷின் அடுத்த படமான கேப்டன் மில்லர், பான் இந்தியா படமாக வெறித்தனமாக தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்த படம் நிச்சயம் தனுஷை இந்திய அளவில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று மாஸ் காட்டுவது நிச்சயம். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என தமிழ் ரசிகர்கள் மட்டுமல்ல பிற மொழி ரசிகர்களையும் ஏங்க வைத்துள்ளது.

Also Read: தனுஷ் வாய்ப்பு கொடுத்து வெற்றி பெற்ற 5 பிரபலங்கள்.. தரமான இயக்குனரை அறிமுகப்படுத்திய பொல்லாதவன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்