தனுஷ் தன்னுடைய விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட நாள் முதலே அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்ற அந்தஸ்தை அவர் மிக சாதாரணமாக இறக்கி வைத்தது பற்றி திரையுலகில் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தது.
இதன் மூலம் தனுஷுக்கு சினிமா துறையில் பல சிக்கல்கள் வரும் என்றும் பேசப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் தோல்வியை தழுவியது. இந்நிலையில் அவருக்கு மிகப்பெரிய பிரச்சினை ஒன்று பூதாகரமாக எழுந்துள்ளது.
அதாவது தனுஷ், ரஜினியின் வீட்டுக்கு அருகில் ஒரு இடத்தை வாங்கி வீடு கட்ட ஆரம்பித்தது பலருக்கும் தெரியும். கிட்டத்தட்ட முப்பது கோடி கொடுத்து வாங்கிய அந்த இடத்தில் 150 கோடிக்கு மேல் செலவு செய்து வீடு கட்ட திட்டமிடப்பட்டது. அப்படி ஒரு பிரம்மாண்ட வீட்டை தனுஷ், ரஜினியை மட்டுமே நம்பி கட்ட முடிவெடுத்தார்.
19000 சதுர அடியில் சகல வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் அந்த வீட்டினால் தற்போது தனுஷ் கவலையில் இருக்கிறாராம். ஏனென்றால் அவ்வளவு ஆடம்பரமாக உருவாகும் அந்த வீட்டின் செலவு கொஞ்சம் முன்ன, பின்ன இருந்தாலும் மாமனார் பார்த்துக் கொள்வார் என்ற தைரியத்தில் தான் அவர் ஆரம்பித்தார்.
ஆனால் இப்போது அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டதால் அவரால் ரஜினியிடம் எந்த உதவியும் கேட்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆரம்பித்த வீட்டின் வேலையை எப்படி முடிப்பது என்று தெரியாமல் தனுஷ் உச்சகட்ட டென்ஷனில் இருக்கிறாராம்.
மனைவியின் ஆசைக்காக மாமனாரை நம்பி தான் தனுஷ் இந்த முயற்சியில் இறங்கினார். தற்போது விவாகரத்து முடிவினால் மாமனாரிடமும் உதவி கேட்க முடியாத பரிதாபமான நிலையில் அவர் இருக்கிறார். இருப்பினும் அவர் எப்படியாவது அந்த வீட்டை கட்டி முடித்து விடுவார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.