புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

அடுத்தடுத்து பிளான் போடும் தனுஷ்.. விவாகரத்துக்கு பிறகு வந்த திடீர் மாற்றம்

சமீப காலமாக தனுஷ் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. அடுத்தடுத்து தோல்வி திரைப்படங்களை கொடுத்து வரும் தனுஷ் தற்போது வெளியாக இருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார்.

இப்படத்திலிருந்து சமீபத்தில் வெளியான தாய் கிழவி பாடல் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திரைப்படம் ரசிகர்களை கவரும் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவரின் நடிப்பில் நானே வருவேன், வாத்தி போன்ற திரைப்படங்கள் உருவாகிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் இப்போதெல்லாம் தன்னுடைய நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவது கிடையாதாம். முழு நேரமும் உடற்பயிற்சி செய்வது, கதை பற்றி யோசிப்பது என்று நேரத்தை கழித்து வருகிறாராம். மேலும் சில நெருங்கிய நண்பர்களை கூட சிறிது நாட்கள் விலகி இருக்கும் படி கூறிவிட்டாராம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை தொந்தரவு செய்யாமல் விலகி இருப்பதாக கூறப்படுகிறது. திடீரென தனுஷின் நடவடிக்கைகளில் இவ்வளவு மாற்றம் ஏற்பட்டது ஏன் என்று தற்போது பலரும் குழம்பி இருக்கின்றனர். விவாகரத்து தான் இதற்கு காரணம் என்று அவரின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றனர்.

தனுஷ் தன்னுடைய விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு ரொம்பவும் அமைதியாக மாறிவிட்டாராம். ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட அவர் யாரிடமும் பேசுவது கிடையாதாம். அந்த அளவுக்கு மனதளத்தில் சோர்ந்து போயிருக்கும் அவர் தற்போது தன்னுடைய பட வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் அவர் பா பாண்டி திரைப்படத்திற்கு பிறகு அடுத்ததாக ஒரு திரைப்படத்தை இயக்கும் முயற்சியிலும் இருக்கிறார். அந்த திரைப்படம் வெளிவந்தால் நிச்சயம் வேற லெவலில் வரவேற்பு கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்து வருகிறாராம். தற்போது அதற்காகத்தான் அவர் கடுமையாக உழைத்து வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Trending News