முதல்வன் பட கதைதான் தனுஷின் மாறன்.. என்ன சீக்ரட்டை இப்பவே உடைச்சுட்டாங்க

ஜகமே தந்திரம் படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாறன். இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. தற்போது மாறன் படத்தின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படத்தில் தனுஷின் மாஸான லுக் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் மாறன் படத்தில் தனுஷின் கதாபாத்திரத்தைப் பற்றி சுவாரசியமான தகவலை இயக்குனர் வெளியிட்டுள்ளார். கார்த்திக் நரேனுக்கு ஆரம்பத்திலிருந்து ஜர்னலிசம் மீது ஆர்வம் இருந்துள்ளது.

அதற்கு காரணம் எந்த விஷயமாக இருந்தாலும் அது மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற சமூக உணர்வு அவருக்குள் இருந்துள்ளது. மக்களிடம் நேரடியாக கொண்டு செல்வதற்கான ஆயுதம் ஊடகம் மட்டுமே. இதை வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற ரொம்ப நாள் ஆசையால் மாறன் படத்தை இயக்கியுள்ளார்.

தனுஷ் இது போன்ற கதாபாத்திரத்தில் இதற்கு முன்பு நடித்ததில்லை. அதனால் புது முயற்சியாக தனுஷ் இப்படத்தில் பத்திரிக்கையாளராக நடித்துள்ளார். ஆனால் இப்படம் முழுவதும் ஒரே ஜானரில் அடங்கிவிடாது. இப்படத்தில் ஆக்ஷன், திரில்லர், ஹியூமர், ஏமோஷன் என எல்லா விஷயங்களும் உள்ளடக்கிய படமாக மாறன் படம் இருக்கும்.

மாறன் படத்தில் சமுத்திரக்கனியின் கெட்டப் அரசியல்வாதி போல் இருப்பதால், தனுஷ் பத்திரிகையாளராக அரசியலில் நடக்கும் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவார் போன்று தெரிகிறது. இப்படம் அரசியல்வாதிக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இடையே ஆன சுவாரசியமான கதை களத்தை கொண்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

தனுஷ், சமுத்திரக்கனி காம்போவில் வேலையில்லா பட்டதாரி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்த நிலையில் மாறன் படத்திலும் இருவரும் இணைந்த நடித்துள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த கதையை கேட்கும் போது முதல்வன் படத்தில் அர்ஜுன் நடித்த கதாபாத்திரம் ஞாபகம் வருகிறது, அரசியல்வாதியாக ரகுவரன் மிரட்டி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை