வெற்றி கொடுத்த இயக்குனரை விடாமல் பிடித்துக் கொண்ட தனுஷ்.. அடுத்த வெற்றிமாறன் இவர்தானாம்

முன்னணி நடிகர்கள் பலரும் மாஸ் படங்கள் கொடுத்து வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தனுஷ் மட்டும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களில் மாஸ் வசூலைக் கொடுத்து வருகிறார்.

அசுரன் மற்றும் கர்ணன் போன்ற படங்கள் முழுக்க முழுக்க கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் ஆகும். ஆனால் அவற்றின் வசூல் முன்னணி நடிகர்களின் மாஸ் படங்களை விட அதிகமாக இருந்துள்ளது.

அந்த வகையில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வெற்றியை வாரி குவித்துள்ளது. இதனால் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு உற்சாகத்தில் உள்ளார்.

அந்த உற்சாகத்தை அப்படியே விட்டுவிடக் கூடாது என மீண்டும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் இன்னொரு படத்தை எடுக்க உள்ளார். இதற்கான தகவல்கள் அரசல் புரசலாக வெளிவந்தன.

ஆனால் தனுஷ் அதை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து விட்டார். கர்ணன் படத்திற்கு பிறகு மீண்டும் மாரி செல்வராஜ் உடன் இணையும் படம் அடுத்த வருடத்தில் தொடங்கும் என்பதையும் கூறியுள்ளார்.

dhanush-latest-tweet
dhanush-latest-tweet

இந்நிலையில் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணிக்கு எப்படி ஒரு வரவேற்பு இருக்குமோ அதே போல் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணிக்கு இனிவரும் காலங்களில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்பதை உணர்ந்த தனுஷ் இனி மாரி செல்வராஜை அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார் என்பதே கோலிவுட்டின் கருத்தாக உள்ளது.

dhanush-mari-selvaraj-cinemapettai
dhanush-mari-selvaraj-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்