தாடி பாலாஜியை கிழித்து தொங்கவிட்ட மனைவி.. மீடியா முன் நடிக்காதீங்க!

ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக நடிகர் தாடி பாலாஜி பங்கேற்றுள்ளார். இருபத்தி நான்கு மணி நேரமும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாவதால் போட்டியாளர்கள் பேசும் அனைத்தையும் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.

அதில் தாடி பாலாஜி தன்னுடைய மனைவி நித்யாவை பற்றி மிகவும் தவறாக பேசியுள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். அப்போதும் அவர்கள் இருவருக்குள்ளும் நிறைய வாக்குவாதம் ஏற்பட்டது.

தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து இருக்கும் நிலையில் மீண்டும் தாடி பாலாஜி நித்யாவை பற்றி தவறாக பேசி இருப்பது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடி தரும் வகையில் நித்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது இனிமேல் பாலாஜி என்னை பற்றி தவறாக பேசினால் அவர் இதற்கு முன்பு என்னிடம் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டார் என்பதற்கு என்னிடம் வீடியோ ஆதாரம் இருக்கிறது. அது அனைத்தையும் நான் சோஷியல் மீடியாவில் ஒவ்வொன்றாக வெளியிட்டு விடுவேன்.

மேலும் என்னை அசிங்கமாக பேசிய வீடியோ மற்றும் வாய்ஸ் மெசேஜ், என் மகளை தரக்குறைவாக பேசிய வீடியோக்கள் என்று அனைத்தும் என்னிடம் இருக்கிறது. அது அனைத்தையும் நான் கோர்ட்டில் சமர்ப்பித்து விடுவேன். ஒருவேளை நான் அந்த நிகழ்ச்சிக்கு வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக சென்றால் அவரை நான் பங்கமாக வைத்து செய்து விடுவேன்.

இதனால் எனக்கு எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் கவலை இல்லை. ஏனென்றால் அவர் அந்த அளவுக்கு ரொம்ப மோசமானவர் என்று கூறியுள்ளார். மேலும் அவருடைய மகள் அப்பா இனிமேல் இப்படி பேசாதீங்க. நான் இன்னும் சின்ன குழந்தை இல்லை. எனக்கு நல்லது கெட்டது எல்லாம் தெரியும், சும்மா  மீடியாவுக்காக உங்கள் அன்பை காட்ட வேண்டாம்.

இனி உங்களை நான் நம்ப மாட்டேன், மீண்டும் இதுபோல பேசினால் டெய்லி ஒரு வீடியோவை நாங்கள் வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது பல விமர்சனங்களை பெற்று வருகிறது. என்னதான் உங்கள் குடும்பத்தில் பிரச்சனை இருந்தாலும் குழந்தை மனதில் நஞ்சை விதைக்காதீர்கள் அன்று நித்யாவிற்கு எதிராக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்