நான்லாம் இப்போ ஹீரோயின் ரேஞ்சுங்க.. தேவதர்ஷினி நடிக்க மறுக்கும் அந்த ரோல்

ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அந்த தொடர்கள் மற்ற தொலைக்காட்சிகளில் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி தொடர் மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

சில தொடர்கள் மக்களின் வரவேற்பால் அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இயக்குனர் நாகாவின் ரமணி Vs ரமணி தொடர் மெகா ஹிட்டானது. நகைச்சுவையாக எடுக்கப்பட்ட குடும்ப டிராமாவான இந்த சீரியல் மிகபெரிய வரவேற்பை பெற்றது.

ரமணி vs ரமணி தொடரின் இரண்டு பாகங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தற்போது இயக்குனர் நாகா ரமணி vs ரமணி 3.0 மூன்றாவது சீசனை தொடங்க உள்ளார். ரமணி vs ரமணி தொடரில் மிஸ்டர் ரமணி ஆக நடித்த ராம்ஜி மீண்டும் இத்தொடரில் நடிக்கிறார்.

இத்தொடரின் சென்ற சீசனில் மிஸஸ் ரமணியாக தேவதர்ஷினி நடித்திருந்தார். தற்போது ரமணி vs ரமணி 3.0 தேவதர்ஷினி நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டாராம். இவர் தற்போது திரைப்படங்களில் பிஸியாக இருப்பதால் இந்த மெகா ஹிட் சீரியலில் நடிக்க மறுத்துவிட்டார்.

அதுமட்டுமல்லாமல் தேவதர்ஷினி விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 96 படத்தில் இவருக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது சீரியலை விட படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.

தற்போது தேவதர்ஷினி கதாபாத்திரத்தில் முதல் சீசனில் மிஸஸ் ரமணி ஆக நடித்த வாசுகி ஆனந்த் நடிக்கிறார். இவர்களது மகள் ராகினியாக பொன்னி சுரேஷும், மகன் ராம் கதாபாத்திரத்தில் பரம் குகனேஷ் நடிக்கிறார். இத்தொடரை 3 சீசன்களாக புஷ்பா கந்தசாமி தயாரிக்கிறார்.