இழுபறியில் சிக்கிக்கொண்ட தனுஷின் படம்.. எதிர்பார்ப்பை கிளப்பிய அப்டேட்

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ், சூப்பர் ஹிட் படங்களான வேலையில்லா பட்டதாரி 2, அசுரன், கர்ணன் ஆகிய படங்களை தொடர்ந்து 4-வது முறையாக கலைப்புலி தாணு தயாரிப்பில் ‘நானே வருவேன்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்குகிறார்.

அத்துடன் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து 8-வது முறையாக கூட்டு சேர உள்ளார். இந்நிலையில் தனுஷ்-செல்வராகவன்-யுவன் சங்கர் ராஜா-கலை புயல் தாணு இவர்களின் கூட்டணியில் உருவாக உள்ள’ நானே வருவேன்’ திரைப்படத்தை குறித்து ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.

ஆனால் தனுஷ் தற்போது ஹாலிவுட் படப்பிடிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவிலிருந்து வந்துள்ள நிலையில், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ என்ற படத்தையும், அதைத்தொடர்ந்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ என்ற படத்தையும் நடித்துக் கொண்டு ரொம்பவே பிஸியாக உள்ளார்.

அதேபோன்று இயக்குனர் செல்வராகவன் நடிகராக அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சாணி காகிதம்’ என்ற திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படமானது விரைவில் ரிலீசாக உள்ளது. இதைத்தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் முக்கிய வில்லனாக செல்வராகவன் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த திரைப்படத்திலும் செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இவ்வாறு தொடர்ந்து படங்களில் கமிட்டாகி கொண்டிருக்கும் செல்வராகவன் ‘நானே வருவேன்’ திரைப்படத்தை இயக்குவதை தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவருமே நடிப்பதில் பிஸியாக இருப்பதால் நானே வருவேன் திரைப்படம் இழுத்துக் கொண்டே போகிறது. இதே வேறு எவராவது இருந்திருந்தால், இதை பெரிய பிரச்சினையாக இருப்பார்கள். ஆனால் அண்ணன் தம்பி என்பதால் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அனுசரித்துக் கொள்கின்றனர். ஆனால் நானே வருவேன் திரைப்படத்தை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்