திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024

மீண்டும் விஜய் டிவியில் தஞ்சமடைந்த டிடி.. பிரம்மாண்டமாக தொடங்க உள்ள சீசன் 3

டிடி இளம் வயதில் இருந்து விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். அதுவும் சூப்பர் சிங்கர் என்றால் டிடி தான். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளை டிடி தொகுத்து வழங்கி உள்ளார். காபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகளும் இதில் அடங்கும்.

இந்நிலையில் வெள்ளித்திரையிலும் சில படங்களில் டிடி நடித்துள்ளார். அதுமட்டுமின்றி விஜய் அவார்ட்ஸ், பெரிய நடிகர்களின் ஆடியோ லான்ச் என்றால் டிடி தான் தொகுத்து வழங்குவார். மேலும் கல்லூரியில் ஆசிரியராகவும் இவர் பணிபுரிந்து இருக்கிறார். இந்நிலையில் அவரது காலில் பிரச்சனை உள்ளதால் அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்.

Also Read : சீக்ரெட் ஆக திருமணத்தை முடித்த விஜய் டிவி தீனா.. மனைவியுடன் வைரலாகும் புகைப்படம்

டிடியால் நிறைய நேரம் ஒரே இடத்தில் நிற்க முடியாது. சமீபகாலமாக சில நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போதும் ஸ்டிக் வைத்து தான் டிடி நடந்து வருகிறார். மேலும் விஜய் டிவியில் இப்போது பிரியங்கா, ரக்சன், மாகாபா போன்ற தொகுப்பாளர்கள் தான் பணியாற்றி வருகிறார்கள். டிடி எப்போது மீண்டும் பழைய பொலிவுடன் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

இப்போது மீண்டும் விஜய் டிவி இடமே தஞ்சமடைந்துள்ளார் டிடி. அதாவது எங்ககிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சியை டிடி சில வருடங்களுக்கு முன் விஜய் டிவியில் தொகுத்து வழங்கி வந்தார். இதன் முதல் சீசன் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆகையால் இரண்டாவது சீசனும் நடத்தப்பட்டு வெற்றி கண்டனர்.

Also Read : தளபதி 68ல் விஜய்க்கு ஜோடியாகும் ஆறடி நடிகை.. விஜய் டிவி நடிகைக்கு வாய்ப்பு கொடுக்கும் வெங்கட் பிரபு

இந்த சூழலில் சீசன் 3 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. இந்நிகழ்ச்சி மூலம் டிடி விஜய் டிவிக்கு மீண்டும் கம்பேக் கொடுக்க இருக்கிறார். இப்போது இந்த தொலைக்காட்சிகளில் புதிய சீரியல்கள் பல இறங்கி உள்ளது. அவர்களை வைத்து இந்நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ஒவ்வொரு வாரமும் இரண்டு தொடர்களில் உள்ள போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ ப்ரோமோவை விஜய் டிவி விரைவில் வெளியிடும். இந்தச் செய்தி டிடி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read : ராட்சசி ஜோதிகாவாக மாறிய விஜய் டிவி ராஜலட்சுமி.. லைசென்ஸ் ட்ரெய்லர் எப்படி இருக்கு? தேறுமா?

- Advertisement -spot_img

Trending News