
கோலிவுட்டில் மிகவும் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் சமீபகாலமாகவே கதைகளை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருவதால் மிகவும் பார்த்து பார்த்து படங்களை ஒப்புக்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இளம் இயக்குனர் இளன் கூறிய கதை பிடித்து விட்டதால் அவருக்காக தனுஷ் ரிஸ்க் எடுத்து வருகிறாராம். அதன்படி தமிழில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடிப்பில் வெளியான பியர் பிரேமா காதல் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் இளன்.
முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகி இருந்த இப்படம் இளைஞர்களை மட்டுமல்லாமல் மக்களையும் வெகுவாக கவர்ந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஹரீஷ் கல்யாணை வைத்து ஸ்டார் எனும் படத்தை இளன் தொடங்கினார். அனால், சில காரணங்களால் அந்த படம் டிராப் ஆனது.
இந்நிலையில் தான் இயக்குனர் இளன், சமீபத்தில் நடிகர் தனுஷை நேரில் சந்தித்து கதை ஒன்றை கூறியுள்ளார். இளன் கூறிய கதை தனுஷிற்கு மிகவும் பிடித்து விட்டதாம். பின்னர் இப்படத்தை தயாரிக்க சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
கதை நன்றாக இருந்தாலும், இளன் கூறிய பட்ஜெட் அதிகமாக இருந்ததால் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தரப்பு மறுத்துவிட்டதாம். அதனால், தனுஷிற்கு இந்த கதை மிகவும் பிடித்து விட்டதால் அவரே வேறு தயாரிப்பாளர்களிடம் சிபாரிசு செய்து வருகிறாராம். அந்த வகையில், தற்போது சினிமா பைனான்சியர் மதுரை அன்புவிடம் தனுஷ் சிபாரிசு செய்த்துள்ளாராம்.
கதை நன்றாக உள்ளது, படம் தயாரியுங்கள் நிச்சயம் வெற்றிபெறும் என கூறி அவரை சம்மதிக்க வைத்துள்ளார் தனுஷ். எனவே விரைவில் இவர்கள் காம்போவில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இருப்பினும் தனுஷே நேரடியாக சென்று சிபாரிசு செய்துள்ளதால் ஏதேனும் பிரச்சனை வந்தால் அவர் தலை தான் உருளும் பாவம் மனுஷன் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கிறாரோ என்று தோன்றுகிறது.