சார்பட்டா படத்தில் ஆர்யாவை விட அதிக பெயர் வாங்கும் டான்ஸிங் ரோஸ்.. செம கேரக்டர்!

ஆர்யா மற்றும் பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகிய மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாகி நல்ல வரவேற்புகளையும் விமர்சனங்களையும் பெற்று வரும் திரைப்படம் சார்பட்டா.

70களில் வாழ்ந்த குத்துச்சண்டை வீரர்களை பற்றிய கதையாக உருவாகியிருந்த சார்பட்டா திரைப்படம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. பார்க்கும் அனைவருமே இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.

ஆர்யாவின் நடிப்பும், அந்த படத்திற்காக போட்ட உழைப்பும் அவருக்கு இரண்டு மடங்கு சந்தோஷத்தை கொடுத்து விட்டதாம். அதுமட்டுமில்லாமல் பா ரஞ்சித், காலா படத்தில் இழந்த பெயரை இந்த படத்தின் மூலம் மீட்டு விட்டார் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

படத்தில் நடித்த பசுபதி, கலையரசன் என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் வரவேற்ப்பை பெற்ற நிலையில் எதிர்பாராத விதமாக சார்பட்டா படத்தில் இடம்பெற்ற டான்சிங் ரோஸ்(Dancing rose) என்ற கதாபாத்திரம் கைதட்டல்களை அள்ளி வருகிறது.

dancing-rose-sabeer-from-sarpatta
dancing-rose-sabeer-from-sarpatta

சபீர் என்பவர் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பையொட்டி ரசிகர்கள் தொடர்ந்து பா ரஞ்சித்திடம் டான்சிங் ரோஸ் என்ற பெயரில் தனியாக அவருக்கு ஒரு படம் எடுக்க அறிவுறுத்தி வருகின்றனர். அந்த அளவுக்கு அவரது கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆர்யாவும் சபீரும் சண்டை போடும் காட்சி தான் படத்தின் இடைவேளை காட்சியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் ஏற்கனவே ஜெயம் ரவியின் அடங்க மறு, ரஜினியின் பேட்ட போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால் அந்த படங்களில் பார்ப்பதற்கு கொஞ்சம் வயதானவர் போல் தெரிந்தார். சார்பட்டா படத்தில் மொத்தமாக உடல் எடையை குறைத்து பக்கா பாக்சிங் வீரராக நடித்து அனைவரையும் மிரள வைத்துள்ளார் இந்த டான்சிங் ரோஸ் சபீர்.

- Advertisement -