வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

அடடா 34 நாட்களாக ரஜினி பட்ட துன்பம்.. 15 நாட்களில் சூப்பர்ஸ்டார் கொடுக்கும் குட் நியூஸ்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தமன்னா, மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில், அனிரூத் இசையமைத்து வருகிறார். படத்தின் முக்கால்வாசி காட்சிகள் இரவில் நடப்பது போல் ஜெயிலர் படம் உருவாகி வருகிறது.

அந்த வகையில் ரஜினியும் இப்படத்திற்காக தனது கடின உழைப்பை போட்டு படம் வெற்றிபெற பல முயற்சிகளை செய்து வருகிறார். அந்த வகையில், ரஜினிகாந்தின் மூத்த மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ரஜினி கமிட்டானார். அந்த வகையில் ஜெயிலர் படத்தில் கொடுத்த கால்ஷீட்டை சற்று மாற்றிவிட்டு லால் ஸலாம் படத்தில் நடித்துள்ளார் ரஜினி.

Also Read: கமலுக்கு நோ சொன்ன ரஜினிகாந்த்.. அதுவும் இந்த டாப் இயக்குனரை நழுவவிட்ட சோகம்!

இதன் காரணமாக ரஜினியை திணற திணற ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வேலை வாங்கியுள்ள செய்தி தற்போது வெளியாகியுள்ளது. சில காலமாகவே ரஜினிகாந்த் படங்களில் நடிப்பதிலிருந்து ஒய்வு எடுக்க முடிவு செய்தார். இதற்கு காரணம் அவரது உடல்நிலை அவ்வப்போது சரியில்லாமல் போவதும், அவரது வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை சமாளிக்கவும் ரஜினி இம்முடிவை அண்ணாத்த படத்தின் போதே எடுத்தார்.

சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பின்போதே ரஜினிக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. அப்போது அண்ணாத்த படத்திற்கு பின் ஒய்வு எடுக்க ரஜினி முடிவு செய்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக அண்ணாத்த படம் படுதோல்வியடைந்தது. இந்த தோல்வியை சரி செய்யவே தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வெற்றிக் கொடுக்க ரஜினி காத்துக்கொண்டிருக்கிறார்.

Also Read: அந்த காலத்திலேயே சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டி போட்ட நடிகர்.. நிலைத்து நின்ற ரஜினிகாந்த்

அந்த வகையில் லால் ஸலாம் படத்தில் தனது மகளின் கேரியருக்காக ரஜினி மறுபேச்சு பேசாமல் ஒப்புக்கொண்டார். இதனிடையே தொடர்ந்து 34 நாட்கள் எந்த ஒரு ஓய்வும் இல்லாமல் லால் ஸலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மும்முரமாக இயக்கி வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் ஜெயிலர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற ரஜினிக்கு வாயில் சர்க்கரை போட்டது போல இன்னும் 15 நாட்களில் இப்படத்தின் ஷூட்டிங்கும் முடிய உள்ளது. இதனையடுத்து மொத்த தூக்கத்தையும் இழந்த ரஜினிக்கு 15 நாட்களுக்கு பிறகு நிம்மதியான ஒய்வு கிடைக்க உள்ளது. மேலும் வரும் தீபாவளிக்குள் ஜெயிலர் படத்தை ரிலீஸ் செய்ய அப்படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: திருப்தி அடையாத ரஜினிகாந்த்.. ஆழம் தெரியாமல் பாதாளத்தில் இறக்கி விட்ட அனிருத்

- Advertisement -

Trending News