ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

லியோ மொத்த டீமுக்கும் கடவுளாய் மாறிய விஜய்.. காஷ்மீரில் பட்ட துயரத்திற்கு கிடைத்த பெரிய லாபம்

தளபதி விஜய் வாரிசு திரைப்படத்திற்கு பிறகு தற்போது லியோ படத்தில் பயங்கர பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். மாஸ்டர் படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜூம், தளபதி விஜய்யும் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறார்கள். மேலும் லோகேஷ் கனகராஜின் விக்ரம் பட வெற்றி தற்போது லியோ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாறியிருக்கிறது.

லியோ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் சென்னையில் தொடங்கியது. பின்பு பிப்ரவரி முதல் வாரத்திலேயே இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக ஜம்மு காஷ்மீருக்கு பட குழு சென்றது. அங்கு ஷூட்டிங் வேலைகள் முடிந்திருக்கின்றன. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்த கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடந்த திட்டமிட்டு இருந்தார்.

Also Read:இந்த நடிகைக்கு நடிப்பு வராது என வெறுத்த இயக்குனர்.. விஜய்யுடன் கெமிஸ்ட்ரியில் நெத்தியடி கொடுத்த ஹீரோயின்

குளிர்காலத்தில் சரியாக திட்டமிடாமல் மொத்த யூனிட்டையும் ஜம்மு காஷ்மீருக்கு அழைத்து சென்று விட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அங்கு நடிகர்கள் முதல் டெக்னீசியன்ஸ் வரை மைனஸ் டிகிரி குளிரில் படாத பாடு பட்டு விட்டனர். கடந்த வாரத்தில் கூட இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி இருந்தது. அதிலேயே மொத்த பட குழுவும் குளிரில் பட்ட கஷ்டங்களை தெரிவித்து இருந்தனர்.

இதற்கிடையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது சில தினங்களுக்கு முன் ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் வேறு உணரப்பட்டது. அப்போது அனைவரும் நலமுடன் இருப்பதாக லியோ பட குழு ட்வீட் செய்திருந்தது. இதை எல்லாம் கருத்தில் கொண்டு தளபதி விஜய் ஒரு முடிவை எடுத்து இருக்கிறார். இது இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு வைத்த பெரிய ட்விஸ்ட் என்று கூட சொல்லலாம்.

Also Read:விஜய் , அஜித்தால் வந்த பிரச்னை.. சிம்புவுக்கு கண்டிஷன் போட்ட உதயநிதி

அதாவது லியோ படத்திற்கு இனிமேல் அவுட்டோர் ஷூட்டிங் வேண்டாம் என்று தளபதி விஜய் சொல்லிவிட்டார். ஹைதராபாத்தில் நடைபெற இருந்த மொத்த ஷெடுலையும் கேன்சல் செய்து விட்டாராம். படத்தின் மீதமுள்ள படப்பிடிப்புகள் அத்தனையும் சென்னையில் தான் நடக்கவிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள பிரசாத் லேப் மற்றும் நடிகர் விஜய்யின் வீடு தயாராகி கொண்டிருக்கிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் மொத்தமாக சென்னை, ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹைதராபாத் என மூன்று கட்ட படப்பிடிப்புகளை திட்டமிட்டு இருந்தார். தற்போது நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்ஸ் நலன் கருதி தளபதி விஜய் மொத்தமாக அத்தனை திட்டத்தையும் மாற்றி இருக்கிறார். விரைவில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

Also Read:விஜய்யை தூக்கி எறிந்த ஜோதிகா.. படபிடிப்பில் சொல்லாமல் போன கொடுமை, வருத்தப்பட்ட தளபதி.!

- Advertisement -

Trending News