IPL: தோனியால் சி எஸ் கே அணிக்கு நடந்த ஒரே நல்ல விஷயம்.. வியாபாரத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் தல

2024 ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் ஆறு வெற்றியும் ஆறு தோல்வியும் சந்தித்து 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது. நடப்பு சீசனில் தோணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி தனி ஒரு வீரராக விளையாடி வருகிறார்.

இந்த சீசனில் ருத்ராச் கெய்வாட் கேப்டன் பொறுப்பில் இருந்தால் கூட முடிவுகளை அனைத்தையும் எடுப்பது தோனி தான். இதற்கு சரியான உதாரணம் தோனி இறங்கும் இடம் தான். அவர் எங்கே இறங்கனும் ன்பதை கேப்டன் தீர்மானிக்க கூடாது. முடிவுகள் அனைத்தும் தோனி கையில் தான் இருக்கிறது.

போட்டிகளை வெற்றி பெறுவது தோனியின் நோக்கமா என்று தெரியவில்லை. கடைசி கட்டத்தில் இறங்கி இரண்டு மூன்று சிக்ஸர்கள் பவுண்டரிகள் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்துவதில் தான் அவரது முக்கியமான பங்கு இருக்கிறது. முதலாவதாக இறங்கி விக்கெட்டை தடுத்து அதிரடி ஆட்டம் விளையாடி பின்வரிசை வீரர்களுக்கு போட்டியை எளிதாக்கி கொடுக்கும் நோக்கமில்லாமல் விளையாடுகிறார்.

கடைசியில் இறங்கி மொத்த மைதானத்தையும் தோனி, தோனி என்று கிறுக்கு பிடிக்க விட வேண்டும். தோனியால் சென்னை அணிக்கு ஒரே ஒரு நல்ல விஷயம் நடந்தது என்றால் அது அந்த அணியின் “நெட் ரன் ரேட்” ஆரம்பத்தில் அதிரடி காட்டாமல் கடைசியில் இறங்கி சிக்சர்கள் போர்கள் என பறக்க விடுகிறார். அதனால் ரன் ரைட் கொஞ்சம் ஏறுகிறது.

இக்கட்டான சூழ்நிலையில் வெற்றி தோல்விகளை ஒப்பிடும் போது இந்த ரன் ரேட் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கும். அது சென்னை அணிக்கு பாசிடிவ்வாக இருக்கிறது. மற்றபடி போட்டியை வென்று கொடுக்கும் முனைப்பில் மகேந்திர சிங் தோனி விளையாட வில்லை என்பதே அனைவரின் கருத்து.

Next Story

- Advertisement -