நான் சூர்யா ரசிகர் தான், ஆனா மாஸ்டர் செம மாஸ்.. விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்திய சிஎஸ்கே வீரர்

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தைப் பற்றி புகழாத ஆட்களே கிடையாது. வழக்கம்போல் விஜய் படங்களை குறை சொல்லும் கூட்டம் மட்டுமே மாஸ்டர் படத்தை கிண்டல் செய்து கொண்டிருந்தது.

ஆனால் மாஸ்டர் படம் வெளியாகி 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து அனைவரையும் மிரள வைத்தது மறுக்க முடியாத ஒன்று. அதுவும் தியேட்டருக்கு மக்கள் வருவார்களா, மாட்டார்களா என்ற சந்தேகத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இதனால் தியேட்டர்காரர்கள் விஜய்யின் புகைப்படத்தை தியேட்டரில் மாட்டி வைத்து தினமும் பூஜை செய்து வருகிறார்களாம். அதிலும் வாத்தி கம்மிங் என்ற பாடல் உலகம் முழுவதும் ஹிட்டடித்தது குறிப்பிடவேண்டிய ஒன்று.

ஐபிஎல் தொடங்கிய சமயத்தில் கூட அனைத்து அணிகளும் மாஸ்டர் படத்தின் பாடல்களை பயன்படுத்தி தொடர்ந்து விளம்பரப் படுத்தி வந்தனர். அதிலும் சிஎஸ்கே சொல்லவே வேண்டாம்.

இப்போதுவரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் எந்த ஒரு புதிய நிகழ்ச்சி வந்தாலும் அதில் மாஸ்டர் ரெபரென்ஸ் இல்லாமல் இருக்காது. இந்நிலையில் நேற்று தமிழ்நாடு சார்பாக தமிழ்நாடு பிரீமியர் லீக் என்ற கிரிக்கெட் தொடர் ஆரம்பமானது.

இதில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நேரலையில் கலந்து கொண்டார். அப்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் ஹிந்தி டப்பிங் படத்தை பார்த்து மகிழ்ந்ததாகவும், தனக்கும் தன்னுடைய மகளுக்கும் அந்த படம் மிகவும் பிடித்திருப்பதாகவும் கூறியிருந்தார். சுரேஷ் ரெய்னா அடிப்படையில் சூர்யா ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

suresh-raina-cinemapettai
suresh-raina-cinemapettai
- Advertisement -