சிஎஸ்கே உடையில் அப்டேட் வெளியிட்ட சிம்பு.. நயன்தாராவை சீண்டும் புகைப்படம்

நடிகர் சிம்பு அவரது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் சிஎஸ்கே ஜெர்சி அணிந்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் தொடர உள்ளன. இதில் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.

இந்நிலையில், நடிகர் சிம்பு சிஎஸ்கே ஜெர்சி அணிந்த புகைப்படத்தை பதிவிட்டு, “CSK x STR சர்ப்ரைஸ்-க்கு தயாராக இருங்கள்” என கேப்ஷன் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் காதில் ஹெட் போன்ஸ் மாட்டிக்கொண்டு பாடுவதற்கு ரெடியாக இருப்பது போல் சிம்பு காட்சி அளிப்பதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு ஆல்பம் பாடல் பாட இருக்கிறாரோ என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

இது ஒருபுறமிருக்க மற்றொரு புறம் சிம்புவின் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். காரணம் சிம்புவின் ஜெர்சியில் 6 என்ற நம்பர் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த புகைப்படத்தை தலைகீழாக திருப்பி பார்த்தால் 9 என்ற நம்பர் தெரிவதால் இதை நடிகை நயன்தாராவுடன் ஒப்பிட்டு வருகிறார்கள்.

str-twit
str-twit

ஆரம்ப காலத்தில் சிம்புவும் – நயன்தாராவும் காதலித்து வந்ததும், பின்னர் இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து சென்றதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். தற்போது நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். விரைவில் இருவரும் திருமணமும் செய்து கொள்ள உள்ளனர்.

str-twit
str-twit

இந்நிலையில் மீண்டும் இதுபோன்று பழைய நினைவுகளை நினைவுப்படுத்தும் விதமாக நெட்டிசன்கள் இதுபோன்ற மீம்களை பதிவிட்டு வருகிறார்கள். காதல் தோல்வி என்பது அனைவரது வாழ்க்கையிலும் நடக்கும் ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால் இவர்கள் செலிபிரிட்டி என்பதாலோ என்னவோ அதை தற்போது வரை பேசி வருகின்றனர்.