சிக்கலுக்கு மேல் சிக்கல்.. வழியின்றித் தவிக்கும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, பரிதவிப்பில் ரசிகர்கள்

டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. அணியில் பேட்டிங் நன்றாக இருந்தாலும் பவுலிங்கில் சொதப்பியதால் அந்த போட்டியில் தோல்வி அடைந்தது.

சென்னை அணியில் மாற்று வெளிநாட்டு பாஸ்ட் பவுலர்கள் இல்லாமல் தோனி கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார். பொதுவாக மும்பை மைதானம் பேட்டிங் செய்வதற்கு சாதகமான மைதானம். அதில் எதிரணி வீரர்களை சமாளிப்பதற்கு நல்ல பாஸ்ட் பவுலர்கள் தேவை.

பவுன்சர் பந்துகளையும், அதிகவேக பந்துகளையும் வீசி பேட்ஸ்மேனை கதிகலங்கச் செய்யும் பவுலர்கள் சென்னை அணியில் இல்லை. அணியில் இருந்த ஹஸல்வுட் தொடரில் இருந்து வெளியேறிவிட்டார்.

அவருக்கு மாற்றாக அறிவிக்கப்பட்ட பெஹன்டிராப் இன்னும் மும்பைக்கு வந்து சேரவில்லை. லுங்கி நிகிடி இன்னும் மும்பைக்கு வரவில்லை, இவர்கள் வந்த பின் தனிமைப்படுத்தப்பட்ட வேண்டும். இதனால் அடுத்த போட்டியில் இவர்கள் ஆட மாட்டார்கள்.

Jason-Lungi-Cinemapettai.jpg
Jason-Lungi-Cinemapettai.jpg

இதனால் இருக்கிற பவுலர்களை வைத்தே சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி இருக்கிறது. ஹஸல்வுட் போனதும் அவருக்கு உடனடியாக மாற்று பவுலரை எடுக்காமல் சிஎஸ்கே தாமதம் செய்தது. இந்த தாமதம் தற்போது சிஎஸ்கேவிற்கு எதிராக திரும்பி உள்ளது.அடுத்த போட்டியிலும் இந்த சிக்கல் நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.