தவறான மருத்துவ பரிசோதனை.. அதிர்ச்சியில் பிக் பாஸ் ஷெரின் வெளியிட்ட தகவல்.!

தனுஷ் நடித்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தின்மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷெரின். இந்தப்படத்தை தொடர்ந்து விசில், ஸ்டூடென்ட் நம்பர் 1, பீமா என சில படங்களில் நடித்தார். தமிழ் தவிர மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

கடைசியாக இவர் தமிழில் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘நண்பேன்டா’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் இவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை.

இதையடுத்து பிக்பாஸ் சீசன் 3 தமிழில் கலந்துகொண்டு 4வது இடம் பிடித்தார். இவர் சில நாட்களுக்கு முன்னர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் தனக்கு கொரோனா வந்துவிட்டது என தெரிவித்திருந்தார். தடுப்பூசி போட்டபின்னரும் கொரோனோவா என அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

தற்போது தனக்கு கொரோனா ஏதும் வரவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மருத்துவ பரிசோதனையில் தவறான தகவல் வந்துவிட்டதென டாக்டர்கள் தெரிவித்தனர். அதாவது 16 ஆம் தேதி மேற்கொண்ட பரிசோதனையில் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தது.

இதையடுத்து மீண்டும் 17 ஆம் தேதி பரிசோதனை மேற்கொண்டேன், அதில் எனக்கு கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. இதனால் தற்போது சற்று நிம்மதி அடைந்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

sherin-cinemapettai-3
sherin-cinemapettai-3

மேலும் அவர், எனக்கு கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்தாலும், என்னை நான் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -