தமிழகத்தில் புதிய லாக்டவுன்.. 12 மணிக்குள் சற்றை சாத்திடனுமாம், எப்போது இருந்து தெரியுமா.?

இந்திய மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடையக் கூடிய ஒரு செய்தி என்றால் அது கொரோனா தொற்று தான். தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை படு தீவிரமாக பரவி வருகிறது.

இதனால் முன்னால் இருந்த அதிமுக-வும் பல கட்டுப்பாடுகள் விதித்து வந்த நிலையில், தற்போது புதிதாக ஆட்சியில் அமர உள்ள திமுகவும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் கொரோனாவை எதிர்த்து பல மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் நேரடியாக சென்று கொரோனா பரவலை தடுப்பதற்காக சோதனை முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர், தடுப்பூசியும் செலுத்தி வருகின்றனர்.

corona-virus
corona-virus

1. தமிழக அரசு மளிகை, பலசரக்கு, காய்கறி கடைகள் மற்றும் இதர கடைகளை திறக்க தடை விதித்துள்ளது. மேற்குறிப்பிட்ட கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2. பேருந்துகள், ரயில்கள் மற்றும்  வாடகை டாக்ஸிகளில் 50 சதவீத இருக்கையில் மட்டுமே பயணிக்க அனுமதி.

3. தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும்.

4. இரவு நேரங்களில் வேலை செய்பவர்களுக்கு இரவு நேரத்தில் வேலை செய்வதற்கான ID Proof இருந்தால் அனுமதிக்கப்படுவார்கள்.

5. திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும், இறுதி சடங்குகளில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி.

இந்த விதிமுறைகளை மக்கள் வரும் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை கடைப்பிடிக்க வேண்டுமாம். கொரோனாவை எதிர்த்துப் போராடி வரும் நிலையில் மக்கள் அனைவரும் அதற்கு ஒத்துழைப்பு கொடுப்பது மட்டுமில்லாமல் தடுப்பூசி செலுத்தக் கூடிய மருத்துவர்கள் மக்களின் உடலில் முறையான பரிசோதனை செய்துவிட்டு தடுப்பூசி செலுத்த வேண்டுமென பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்