புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கூல் சுரேஷ் மீது வன்மத்தை கக்கிய பிக் பாஸ் போட்டியாளர்கள்.. பொங்கி எழுந்தும் பிரயோஜனம் இல்ல

BB 7 Cool Suresh: பிக் பாஸ் ஏழாவது சீசனில் போட்டியாளராக நுழைந்த கூல் சுரேஷ் நேற்று வரை காமெடி பீஸ் ஆகத்தான் எல்லோர் கண்களுக்கும் தெரிந்தார். ஆனால் சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பது போல் இன்று வெளியான ப்ரோமோவில் ரொம்பவும் கோபப்பட்டு, ஹவுஸ் மேட்ஸ் இடம் பேசி இருக்கிறார். கூல் சுரேஷ் இந்த அளவுக்கு டென்ஷன் ஆகிறார் என்றால் அப்படி என்னதான் பிக் பாஸ் வீட்டில் நடந்திருக்கிறது என பார்க்கலாம்.

20 போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வார எலிமினேஷனில் அனன்யா ராவ் வெளியேறினார். அதன்பின்னர் பவா செல்லதுரை தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இதனால் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என கமலஹாசன் அறிவித்திருந்தார். ஒருவேளை இந்த வாரம் எலிமினேஷன் நடந்திருந்தால் நடிகை மாயா வெளியேறி இருப்பார்.

விசித்ரா, மணி, ரவீனா, மாயா, பூர்ணிமா, பிரதீப், சரவண விக்ரம், விஷ்ணுவிஜய், அக்‌ஷயா, யுகேந்திரன், ஐஷூ, நிக்சன், ஜோவிகா, விஜய் வர்மா, வினுஷா என 16 போட்டியாளர்கள் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார்கள். பிக் பாஸ் தினமும் காலையில் ஹவுஸ் மேட்ஸ்க்கு டாஸ்க் கொடுப்பது வழக்கம். அதேபோன்று ஒரு டாஸ்க் கொடுத்து தான் காலையிலேயே ஏழரையை இழுத்து விட்டு இருக்கிறார்.

பிக் பாஸ் சாபக்கல் என்னும் ஒரு கல்லை கொடுத்து இதை ஏதாவது ஒரு போட்டியாளரிடம் கொடுக்க வேண்டும். ஹவுஸ் மேட்ஸ் யார் பெயரை அதிகமாக சொல்கிறார்களோ அவரிடம் இந்த கல் இருக்க வேண்டும். அந்த நபர் உடனேயே ஸ்மால் பாஸ் வீட்டுக்கு சென்று விட வேண்டும். அது மட்டும் இல்லாது அடுத்த வாரம் சாபக்கல் இருக்கும் நபர் நேரடியாக நாமினேஷன் செய்யப்படுவார் என சொல்லி இருக்கிறார்.

மறைமுகமாக நாமினேஷன் செய்ய வேண்டும் என்றால் தைரியமாக போட்டியாளர்கள் செய்து விடுவார்கள். இது நேரடியாக நடக்கும் டாஸ்க் என்பதால் மொத்தமாக எல்லோரும் சேர்ந்து கூல் சுரேஷ் பெயரை சொல்லி விட்டார்கள். இது அவருக்கு மிகவும் டென்ஷன் ஆகிவிட்டது. என்ன பாத்தா உங்களுக்கு இளிச்சவாயன் மாதிரி இருக்கா, ஏமாந்தவன்னா என்ன வேணா பண்ணுவீங்களா என பயங்கரமாக கத்தி விட்டார்.

உண்மையில் கூல் சுரேஷ் பெயரை சொல்லி எஸ்கேப்பாக நினைத்த போட்டியாளர்களுக்கு இது சிறந்த பதிலடியாக இருந்தது. கூல் சுரேஷ் இன்று ஸ்மால் பாஸ் வீட்டுக்கு செல்வதோடு, அடுத்த வாரம் நாமினேஷனும் ஆகிறார். கண்டிப்பாக இவருக்கு பார்வையாளர்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறது. இதனால் கூல் சுரேஷ் அவ்வளவு சீக்கிரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வாய்ப்பே இல்லை.

- Advertisement -

Trending News