அஸ்வின் மாதிரி ஆட்டம் போடும் குக் வித் கோமாளி நடிகை.. இப்படியே போனா காணாம போயிடுவீங்க!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில், பல பிரபலங்கள் சமையல் மட்டும் செய்யாமல் ஆடுவது, பாடுவது, நகைச்சுவையாக பேசுவது என கலக்கலாக இணையத்தில் ட்ரெண்டானார்கள்.

அதில் ஒரு சிலர் இந்த நிகழ்ச்சியின் புகழை வைத்து திரைப்படங்களில் ஹீரோக்களாக நடிப்பது, பாடல்களைப் பாடுவது என தங்களது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டு வருகின்றனர். இதனிடையே குக்கு வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஒரு நடிகை அன்மையில் பண விஷயத்தில் பயங்கரமாக கோல்மால் செய்துள்ளார்.

Also Read : முதல்முறையாக TRP யில் சன் டிவிக்கு ஆப்பு வைத்த விஜய் டிவி.. ஒரே ஒரு நிகழ்ச்சிக்கு கொட்டும் கோடிகள்!

நகைச்சுவை நடிகர் சதீஷ் ஹீரோவாக அறிமுகமாகி நடித்த நாய் சேகர் திரைப்படத்தில் , கதாநாயகியாக அறிமுகமான பவித்ராலட்சுமி குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குப்பெற்று பிரபலமானார். இவரை பெங்களூரில் உள்ள ஒரு தயாரிப்பு நிறுவனம் படத்திற்கு ஆடிஷன் செய்ய அழைப்பு விடுத்திருந்தது.

மேலும் விமான டிக்கெட் உள்ளிட்டவை அந்நிறுவனம் போட்டு கொடுப்பதாகவும், அதன்மூலமாக ஆடிஷனில் வந்து கலந்து கொள்ளுமாறும் பேசி இருந்தனர். உடனே பவித்ராலட்சுமி, நானே விமான டிக்கெட்டை போட்டுவிட்டு வந்து விடுகிறேன், எனக்கு நீங்கள் பணமாக கொடுத்தால் போதும் என தெரிவித்துள்ளார்.

Also Read : கிளாமர் ஹீரோயின்களுக்கே சவால் விடும் ரட்சிதா.. பிக்பாஸ் மேடையில் போட்ட கவர்ச்சி ஆட்டம்

இதற்கு ஒப்புக்கொண்ட அந்நிறுவனம், ஆடிஷன் தேதி வந்தவுடன் பவித்ராலட்சுமிகாக காத்துக் கொண்டிருந்தது. ஆனால் பவித்ரா லட்சுமி அன்றைக்கு ஆடிஷனுக்கு செல்லாமல் இருந்துள்ளார். உடனே மறுநாள் அந்நிறுவனத்திற்கு போன் செய்து பேசிய அவர், தான் விமான டிக்கெட் புக் செய்து கிளம்பும் தருவாயில் அவசர வேலையாகச் சென்று விட்டேன் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் விமான டிக்கெட் புக் செய்த செலவாக 13 ஆயிரம் ருபாய் தனக்கு நஷ்டமாகி உள்ளதாகவும், இதனால் நீங்கள் எனது வங்கி கணக்கில் அப்பணத்தை அனுப்பி வைக்குமாறும் பவித்ரா லட்சுமி பேசியுள்ளார். உடனே இதை கேட்ட அந்நிறுவனம் ஒரு படம் நடித்து விட்டு இப்படி ஆடுகிறார்கள் என பவித்ரா லட்சுமியை கழுவி ஊற்றி வருகிறதாம். இதேபோல் அஸ்வின் மேடையில் பேசி அசிங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read : பிக்பாஸில் கணவரை பற்றி வாய் திறக்காத ரக்ஷிதா.. பிரிவுக்கு இப்படியெல்லாம் ஒரு காரணமா!