குக் வித் கோமாளி என்ற ஒரே ஒரு நிகழ்ச்சிதான்.. மூன்று படங்களில் ஹீரோவாக ஒப்பந்தமான பிரபலம்

வாரிசு நடிகர்களை விட சமீபகாலமாக யூடியூப் மற்றும் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் பிரபலமாக வலம் வரும் சிலர் தான் தற்போது சினிமாவில் ஹீரோவாகவும் காமெடியனாகவும் உருவெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி நிறைய பேருக்கு சினிமா வாழ்க்கையை பெற்றுத் தந்துள்ளது. அதில் புகழ் மற்றும் சிவாங்கி ஆகிய இருவரும் தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக புகழ் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு, யோகிபாபு ஆகியோருக்குப் பிறகு ஒரே நேரத்தில் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களையும் கைப்பற்றிய காமெடியனாக வலம் வருகிறார் புகழ்.

இது ஒருபுறமிருக்க குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற பிரபலமாக வலம் வருபவர் அஸ்வின். கடந்த 5 வருடங்களுக்கு மேல் யூடியூப் பக்கத்தில் ஆல்பம் பாடல்கள் நடித்துக்கொண்டிருந்த அஸ்வினுக்கு விஜய் டிவி குக் வித் கோமாளி வாய்ப்பைக் கொடுத்தது.

அதில் சிவாங்கியின் மூலம் புகழ்பெற்ற அஸ்வின் தற்போது அடுத்தடுத்து ஒரே நிறுவனத்திற்காக மூன்று படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் அஸ்வினை வைத்து அடுத்தடுத்து படங்களை தயாரிக்க உள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைய பேருக்கு வாழ்க்கை கொடுத்துள்ளது என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. இதனால் தற்போது பல வாரிசு நடிகர்களும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்த சீசனுக்கு குறி வைத்துள்ளார்களாம்.

ashwin-kumar-cookwithcomali2
ashwin-kumar-cookwithcomali2
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்