குக் வித் கோமாளி 3வது சீசன் எப்போது தெரியுமா.? இப்பவே விளம்பரப்படுத்திய புகழ்

விஜய் டிவியில் பிரபலமான குக் வித் கோமாளி சிசன் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் சீசனில் பிக்பாஸ் பிரபலங்களான வனிதா விஜயகுமார், ரேகா, ரம்யா பாண்டியன் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கோமாளிகளாக புகழ், பாலாஜி, சிவாங்கி இருந்து வந்தனர். இரண்டாவது சீசனில் ஷகிலா, தர்ஷா குப்தா, பவித்ரா, பாபா பாஸ்கர், அஸ்வின் போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தற்போது  3வது சீசன் எப்போது தொடங்கும் என்பதை புகழ் ஒரு பேட்டியில் குழந்தைகள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து உள்ளார். இன்னும் மூன்றே மாதங்களில் தொடங்கி விடும் என்றும் விரைவில் உங்களை குக் வித் கோமாளி சிசன் 3 பார்க்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளை மாற்ற போவதில்லையாம் எப்போதும் போல குக் மட்டும் மாற்றப்படுகிறார்கள். இப்படி இருக்கையில் பிக் பாஸ் சீசன் தொடங்குவதற்கு முன்னதாகவே குக் வித் கோமாளி தொடங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

வாரத்தில் ஒரு நாள் மட்டுமே இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது. 2வது சீசனில் கலந்து கொண்ட ஒரு சில பிரபலங்கள் பட வாய்ப்பு கிடைத்துவிட்டது. இதனால் சீசன் 3-ல் கலந்து கொள்வதற்காக கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

cookwithcomali-cinemapettai
cookwithcomali-cinemapettai