கலப்பு திருமணம் செய்தால் ரூ. 60,000 நிதி உதவியும், 8 கிராம் தங்கம் வழங்கப்படும்.. திமுக தேர்தல் அறிக்கையால் சர்ச்சை!

வரும் சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் திமுக கட்சி தற்போது ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள், உயர் ஜாதி பெண்களை திருமணம் செய்து கொண்டால்,

அவர்களுக்கு ஊக்கத் தொகையுடன் 8 கிராம் தங்க காசு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஏனென்றால் இந்த அறிக்கையின் மூலம் ஜாதி பெண்களை இழிவுபடுத்துவதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து கலவையான விமர்சனங்கள் எழ தொடங்கிவிட்டது.

ஏனென்றால் தேர்தல் அறிக்கையில் 259-வதாக குறிப்பிடப்பட்டுள்ள அம்சத்தில் கலப்பு திருமணம் செய்து கொள்ளும் மணமக்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிற இனத்தவரை மணந்து கொண்டால்,

dmk-announcement
dmk-announcement

ரூ, 60,000 நிதி உதவியும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்களிடையே பல்வேறு விதமான சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.

சிலர் சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக, சமூக ஒற்றுமையை உருக்குலைக்க கூடாது என்பதே பொது மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

- Advertisement -