போட்டியாளரின் கன்னத்தைக் கடித்த பூர்ணா.. நிகழ்ச்சியில் நடுவர் செய்கிற வேலையா இது?

கேரளாவை சேர்ந்த பூர்ணா மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் முதல்முறையாக முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் .

அதற்கு பின்னர் ஆடுபுலி, சகலகலா வல்லவன், மணல் கயிறு, கொடிவீரன், சவரக்கத்தி, அடங்க மறு, காப்பான் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை பெற்றார் பூர்ணா.

தற்போது தெலுங்கு, மலையாளம், தமிழ் என்று கொடி கட்டி பறக்கும் பூர்ணாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. கிட்டத்தட்ட 5 படங்கள் முடித்து வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.

அது மட்டுமில்லாமல் 6 படங்களில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் பூர்ணா ‘தலைவி’ படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பூர்ணா தெலுங்கில் தீ ஜோடி என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். இன்னிலையில் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர் அருமையாக ஆடியதற்காக அந்த இளைஞரின் கன்னத்தில் முத்தமிட்டுள்ளார்.

actress-poorna-cinemapettai
actress-poorna-cinemapettai

மேலும் அவர் கன்னத்தை கடித்திருக்கும் வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ‘நடுவர் செய்கிற வேலையா இது?’ என்று கிண்டலடிகின்றனர்.

Next Story

- Advertisement -