காசுக்காக ஐபிஎல் ஆடுகிறிர்கள்.. உலக கோப்பை போட்டிக்கு ஓய்வா.? விளாசும் முன்னால் வீரர்கள்

2021 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது. ஆரம்பத்தில் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளாக பார்க்கப்பட்டது இந்திய அணி. ஆனால் இப்பொழுது அரையிறுதி செல்வதற்கே பெரும் சிக்கலாக அமைந்துள்ளது இந்திய அணியின் அடுத்தடுத்த இரண்டு தோல்விகள்.

ஆஸ்திரேலியா தொடர், இந்தியா- இங்கிலாந்து சுற்றுப்பயணம். இங்கிலாந்து- இந்தியா சுற்றுப்பயணம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐபிஎல் முதல் பாதி- இரண்டாம் பாதி என தொடர்ந்து இந்திய அணி ஓய்வில்லாமல் விளையாடிக் கொண்டிருக்கிறது. ஆகையால் வீரர்கள் அனைவரும் ஒருவித களைப்பில் உள்ளனர். இது நடந்து கொண்டிருக்கும் உலகக் கோப்பை போட்டிகளில் எதிரொலிக்கிறது. வீரர்களுக்கு ஓய்வு தேவை என்ற கோணத்தில் பேசுகின்றனர்.

Bumrah-Cinemapettai.jpg
Bumrah-Cinemapettai.jpg

இந்நிலையில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்விக்கு பின் பேசிய ஜஸ்பிரித் பும்ரா, இந்திய அணி வீரர்கள் அனைவருமே நல்ல பார்மில் இருக்கின்றனர், ஒரு போட்டி, இரண்டு போட்டிகளை வைத்து ஒரு அணியை கணிக்க முடியாது, வீரர்கள் பல தொடர்கள் தொடர்ந்து விளையாடி வருவதால் சில மனச்சோர்வுகள் ஏற்படுகிறது. அதிலிருந்து மீண்டு வருவதற்கு நிச்சயம் ஓய்வு வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

Jasprit1-Cinemapettai.jpg
Jasprit1-Cinemapettai.jpg

ஜஸ்பிரித் பும்ரா இவ்வாறு பேசியதற்கு முன்னாள் வீரர்கள் பலர், நீங்கள் விருப்பப்பட்டு அனைத்து போட்டிகளும் விளையாடுகிறீர்கள். பணத்திற்காக ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடுகிறீர்கள், இப்பொழுது தோல்விக்குப் பின் உலகக்கோப்பையில் ஓய்வை பற்றி பேசுவது நியாயமில்லை என்று விளாசுகிறார்கள்.