வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

தமிழகத்தை உலுக்கிய ஸ்ரீமதி-யின் மரணம்.. மக்கள் போராட்டத்தால், அதிரடி ஆக்ஷனில் முதல்வர்

சமீப காலமாக தமிழ்நாட்டில் பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகமாகி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தையே கலங்கடிக்கும் அளவுக்கு மற்றொரு தற்கொலை சம்பவம் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி அருகே பனிரெண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.

ஆரம்பத்தில் இந்த மரணம் தற்கொலை தான் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவியின் மரணத்திற்காக நீதி கேட்டு தற்போது பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

நேற்று வெளியான மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவருடைய ஆடைகளில் ரத்தக்கடைகள் இருந்ததாகவும், பல இடங்களில் ஏற்பட்ட காயத்தால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அதனால்தான் மாணவியின் உயிர் பிரிந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாணவியின் இதயம் உள்ளிட்ட பிற உறுப்புகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதை அடுத்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் பிரேத பரிசோதனையின் அறிக்கை தவறானது என்றும், மரணத்திற்கான நீதி கிடைக்கும் வரை மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் மாணவி படித்த பள்ளியிலும் பொதுமக்கள் திரண்டு வந்து கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்சனை தற்போது கட்டுக்கடங்காமல் இருப்பதால் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.

இருப்பினும் மாணவியின் சாவுக்கு நியாயம் வேண்டும் என்று தற்போது பொதுமக்கள் பலரும் சோசியல் மீடியாவில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட அந்த பள்ளியில் இதற்கு முன்பே சில மரணங்கள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்த விஷயத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகிறது. மேலும் மாணவியின் மரணத்திற்காக தற்போது ஒட்டுமொத்த தமிழகமும் குரல் கொடுத்து வருகிறது. இதனால் அரசு இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். அதுவே மாணவியின் மரணத்திற்கான நீதியாக இருக்கும்.

இப்படி போராட்டம் பூகம்பமாக வெடித்ததால், பள்ளியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள மேலாளர், பள்ளி முதல்வர் போன்றவர்களை கைது செய்து இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உள்ளது தமிழக அரசு.

- Advertisement -

Trending News