வீட்டில் மரியாதையே இல்ல கதறிய மதுமிதா.. அழுகாச்சி வாரமாகும் பிக் பாஸ்

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தினமும் யாராவது ஒரு பெண் போட்டியாளர் அழுது கொண்டே இருக்கிறார். அந்த வகையில் இன்று கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசி வந்த மதுமிதா அழுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் போட்டியாளர்கள் கிராமம் மற்றும் நகரம் என்று இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இந்த வார பிக் பாஸ் வீட்டின்  தலைவராக மதுமிதா உள்ளார்.

மதுமிதா வீட்டின் தலைவராக நான் எது சொன்னாலும் யாரும் கேட்பதில்லை என்று அழுகிறார். மேலும் எனக்கு எந்த பவரும் இல்லை அவங்க தான் எல்லாமே ரூல் பண்றாங்க என்று கதறுகிறார்.

மற்ற போட்டியாளர்கள் அனைவரும் மதுமிதாவை சமாதானப்படுத்த முயல்கின்றனர். ஆனால் மதுமிதா தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறார். மற்றொரு புறம் இசை வாணியும் அழுது கொண்டிருக்கிறார்.

இந்த காட்சிகளை வைத்து பார்க்கும்போது இசைவாணி வீட்டில் அனைத்தையும் கண்ட்ரோல் செய்கிறார் என்பது போல் தெரிகிறது. அதனால்தான் மதுமிதா தான் ஓரங்கட்ட படுவதாக அழுகிறாரா என்ற சந்தேகமும் எழுகிறது.

நேற்றைய எபிசோடில் கூட சுவாரஸ்ய மற்ற போட்டியாளர்களாக பவானி மற்றும் மதுமிதா தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு இரவு முழுவதும் விழித்திருந்து நெருப்பு அணையாமல் பார்க்கும் தண்டனையை பிக்பாஸ் வழங்கினார்.

இது அனைத்தும் சேர்ந்து மதுமிதாவை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி இருக்கும் என்று தெரிகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்