சொந்தக் கட்சியின் மீது குற்றம் சாட்டும் காங்கிரஸ் எம்பி.. பரபரப்பைக் கூட்டும் தேர்தல் களம்!

அண்மையில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவையில் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோதிமணி தனது சமூக வலைப்பக்கத்தில் சொந்தக் கட்சியையே குற்றம்சாட்டியுள்ளார்.

ஏனென்றால் காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலமாக விசுவாசமாக பணியாற்றுபவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் பணம் இருப்பவர்களுக்கு வேட்பாளர் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை ஜோதிமணி முன்வைத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வு மற்றும் தொகுதி பங்கீடு ஆகியவை வெளிப்படைத்தன்மை ஆக நடத்தப்படவில்லை. இதை எல்லாம் நான் தட்டி கேட்டாலும் பதில் கிடைக்கவில்லை.

இருப்பினும் தொண்டர்களின் ரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவேன். கட்சியில் நீண்டகாலமாக உழைக்கும் தொண்டர்களுக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் மிகப்பெரிய அநியாயம்.

jothimani-MP

மேலும் காங்கிரஸ் கட்சியானது தொண்டர்களின் இரத்தத்தினாலும் வியர்வையினாலும் உருவானது.

அதனை அழிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கொந்தளித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான ஜோதிமணி.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்