எதிர்க்கட்சி கூட்டணியில் ஏற்படும் குளறுபடி.. வெளியேறும் காங்கிரஸ்!

வரும் ஏப்ரல் 2-ம் தேதி நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளை உறுதி செய்து, தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்க் கட்சியான திமுக, காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தை நிறைவேறியது. இருப்பினும் காங்கிரசுக்கு எத்தனை தொகுதி என்ற அறிவிப்பை தற்போது வரை திமுக வெளியிடாமல் இருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, கே.எஸ். அழகிரி மற்றும் ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த கேஎஸ் அழகிரி பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது என தெரிவித்தார்.

இருந்தபோதும் பிரச்சாரத்தின்போது ராகுல்காந்தி எந்த சூழ்நிலையிலும் திமுகவின் பெயரையோ அல்லது திமுக தலைவரான ஸ்டாலின் பெயரையோ குறிப்பிடாதது திமுக காங்கிரஸ் கூட்டணி இடையே விரிசல் இருப்பதை காட்டுகிறது.

அதைப்போல் ராகுலின் பிரச்சார திட்டத்தில் ஸ்டாலினை சந்திப்பது போன்ற எந்த ஒரு செய்தியும் வெளியிடவில்லை. மேலும் தமிழகத்திற்கு இரண்டாவது முறையாக வந்த ராகுல்காந்தி எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினை சந்திக்காமல் சென்றதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதைப்போன்று காங்கிரஸ் கட்சித் தலைவர்களை திமுக நடத்தும் விதமும் அந்த கட்சியின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. ஆகையால் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து விலகி மூன்றாவது அணி களம் காண அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -