பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட முன்னணி ஹீரோக்களின் 10 படங்கள்.. அதுவும் அந்த கடைசி படம் எடுத்து 22 வருஷமாச்சி!

வருடத்திற்கு 200 படங்களை வெளியிடும் தமிழ் திரையுலகில் எத்தனையோ படங்கள் முடிக்கப்படாமலும் எத்தனையோ படங்கள் முடிக்கப்பட்டும் வெளியிடாமலும் இருந்து வருகின்றன. அப்படியான சில படங்களில் சிலவற்றை தேர்விட்டு வைத்துள்ளோம்.

சர்வர் சுந்தரம்: நடிகர் நாகேஷ் நடிப்பில் 70களில் பட்டையை கிளப்பிய படம் சர்வர் சுந்தரம். அதே தலைப்பில் நடிகர் சந்தானம் நடிப்பில் ஒரு படம் உருவாகியது. படத்திற்கான அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் ஜனவரி 31 2020ல் வெளியிடுவதாக இருந்தது இப்போது வரை அடுத்த அப்டேட் ஏதுமில்லை.

Server Santhanam

துருவ நட்சத்திரம்: இயக்குனர் கவுதம் மேனன் சியான் விக்ரம் கூட்டணியிீ் உருவாகி வருவதாய் கூறப்பட்ட படம் துருவ நட்சத்திரம். இப்படத்தின் சில காட்சிகள் இன்னும் படமாக்கப்படாத நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அப்டேட்டுகளுக்காக காத்திருக்கிறார்கள் சியான் ரசிகர்கள்.

dhruva-natchathiram-cinemapettai

மதகதராஜா: இயக்குனர் சுந்தர.சி விஷால் கூட்டணியில் உருவான படம் மதகதராஜா. அஞ்சலி வரலட்சுமி நடித்த இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டு நீண்ட காம் ஆன நிலையில் அதற்கு பிறகான அப்டேட் ஏதும் இல்லை.

vishal-sundar

நரகாசுரன்: நடிகர் அரவிந்சாமி நடிப்பில் கடந்த மார்ச் 2020ல் வெளியிடுவதாய் இருந்த படம் நரகாசுரன். கோவிட்19 ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட வெளியீட்டுக்கு பிறகு இந்த படம் பற்றி எந்த அப்டேட்டும் இல்லை.

naragasooran-cinemapettai
naragasooran-cinemapettai

சுமோ: மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகிய படம் சுமோ. வழக்கம் போல காமெடிக்கு ஒரு அணியை வைத்து அணிவகுத்திருந்தார் சிவா. கடந்த கோடைக்காலத்தில் வெளியிடுவதாய் இருந்த இந்த படம் அடுத்த அப்டேட் எதனையும் வெளியிடவில்லை.

naragasooran-cinemapettai
siva in sumo

யங் மங் சங்: பிரபுதேவா நடிப்பில் 2017ல் வெளியிடுவதாக கூறப்பட்ட படம் யங் மங் சங். ஆர்.ஜே.பாலாஜி காமெடியில் கலக்கல் ஹிட் தரும் என எதிர்பார்ப்பில் இருந்த இந்த படம் 2017லிருந்து இப்போது வரை அடுத்த அப்டேட் ஏதும் தரவில்லை.

prabhu-deva-cinemapettai
prabhu-deva-cinemapettai

சதுரங்க வேட்டை 2: அரவிந்சாமி த்ரிசா நடிப்பில் 2017ல் வெளியிட இருந்த படம் சதுரங்க வேட்டை 2. இந்த படத்தில் ஏற்பட்ட பட்ஜெட் சிக்கலால் இப்போது வரை படம் வெளியிடப்படாமல் உள்ளது.

prabhu-deva-cinemapettai

பார்ட்டி: கூட்டு காமெடி முயற்சியில் உருவாக்கப்பட்ட இப்படம் கடந்த சம்மருக்கு ரிலீசாகவிருந்தது. அதனை தொடர்ந்து வேறு அப்டேட்கள் ஏதுமில்லை.

prabhu-deva-cinemapettai
party-venkat-prabhu

பாரிஸ் பாரிஸ்: இந்தியில் குயின் படத்தின் ரீமேக்காக பாரிஸ் திரைப்படம் எடுக்கப்பட்டது. காஜல் அகர்வால் நடிப்பில் 2020ல் வெளியிடவிருந்த இப்படத்தின் அடுத்த போஸ்டர் கூட வெளிவரவில்லை.

prabhu-deva-cinemapettai
KA

மருதநாயகம்: 1995ல் கனலஞர் கருணாநிதியால் துவங்கப்பட்ட வரலாற்று படமான மருதநாயம் ப்ராஜக்ட் உலகநாயகனின் கனவு ப்ராஜக்ட்.

prabhu-deva-cinemapettai
kamal-maruthanayagam

அந்த அளவிலான டெக்னாலஜிக்கள் வளர்ந்திராத நிலையிலேயே சில கோடிகளுக்கு கிராபிக்ஸ் க்கான பட்ஜெட் போடப்பட்டது. இப்போதும் யூடியுப்பில் கிடைக்கும் இப்படத்தின் டிரைலர் அப்போதய காலத்தையே அசர வைக்கும்.