மாஸ்டர் படத்துக்கும் வலிமைக்கும் உள்ள இந்த ஒற்றுமை.. தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிடப்பட்டதா?

அஜித் மற்றும் வினோத் இருவரின் கூட்டணியில் உருவாகியுள்ள வலிமை இரண்டு வருடத்திற்கு மேலாக நடைபெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து படம் ரிலீசுக்கு தயார் நிலையில் இருந்தது. மேலும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் பொங்கலுக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் எதிர்பாராத விதமாக தமிழகத்தில் ஓமிக்ரோன் வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் வலிமை திரைப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் ரேஸில் இருந்து விலகிய வலிமை திரைப்படம் குறித்து பல கருத்துக்கள் நிலவி வருகிறது.

வலிமை திரைப்படம் சமீபத்தில்தான் யு எ என்ற தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ளது மேலும் இப்படத்தில் சில சர்ச்சையான காட்சிகள் மற்றும் வசனங்கள் இருப்பதால் 15 இடங்களில் காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன.

இதனால் வலிமை திரைப்படம் மூன்று மணி நேரம் 10 நிமிடங்களில் இருந்தது தற்போது இரண்டு மணி நேரம் 58 நிமிடங்கள் 35 நொடிகள் ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதே போன்றதொரு நிகழ்வு நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திலும் உண்டு.

அதாவது மாஸ்டர் திரைப்படத்தின் நீளமும் இரண்டு மணி நேரம் 58 நிமிடங்கள் முப்பத்தி ஐந்து நொடிகள்தான். இந்த இரண்டு படங்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை பற்றி தற்போது அவரது ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

இது தற்செயலாக நடந்த ஒன்றா அல்லது வேண்டுமென்றே பிளான் பண்ணி செய்யப்பட்டதா என்ற கேள்வியும் அவர்களிடையே எழுந்து வருகிறது. மேலும் இது தொடர்பான விவாதங்களும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே தற்போது உருவாகியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்