சந்தானம் மாதிரி ஹீரோவாக வேண்டும்.. மார்க்கெட் முக்கியம் என அட்வைஸ் செய்த நட்பு வட்டாரம்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் ஹீரோவாக அவதாரம் எடுப்பது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் யோகி பாபு, அப்புகுட்டி, சந்தானம் என்று அனைவரும் ஹீரோவாக படம் நடித்துள்ளனர்.

இந்த வரிசையில் சூரி எப்பொழுது ஹீரோவாக நடிப்பார் என்று பலரும் கேட்டு வந்தனர். அதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த சூரி தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இயக்குனர் அமீர் இயக்க இருக்கும் படத்தில் தான் சூரி ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

தற்போது சூரி ஹீரோவாக நடிக்கிறார் என்று வந்த இந்த தகவலால் அவரது ரசிகர்கள் மிகுந்த கவலை அடைந்திருக்கின்றனர். ஏனென்றால் இதே போன்று காமெடியில் கலக்கி வந்த சந்தானம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். ஆனால் அவரது காமெடியை ரசித்த மக்களால் அவரை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆனாலும் தொடர்ந்து ஹீரோவாக தான் நடிப்பேன் என்று சந்தானம் முடிவெடுத்ததால் அவருக்கு பட வாய்ப்புகள் கணிசமாக குறைந்தது. இதன் காரணமாகவே சூரியின் ரசிகர்கள் ஆழ்ந்த கவலையில் உள்ளனர். எது எப்படியோ ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று சூரி முடிவு எடுக்காமல் இருந்தால் சரிதான்.

அதேபோல தமிழ் சினிமாவின் உச்ச காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் கவுண்டமணி. அன்றைய காலகட்டத்தில் அவர் இல்லாத திரைப்படங்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு அனைத்து ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார் அதிலும் அவர் செந்திலுடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் அனைத்தும் என்றும் ரசிகர்களால் ரசிக்கக் கூடியவை.

இவ்வாறு காமெடியில் கலக்கி வந்த கவுண்டமணி ஹீரோவாக பிறந்தேன் வளர்ந்தேன், எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் அந்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற தவறியது.

திரைப்படங்களில் கவுண்டர் மேல் கவுண்டர் கொடுத்து காமெடியில் அசத்தும் கவுண்டமணியை பார்க்கவே மக்கள் விரும்பினார்கள் அதனால் அவரை ஹீரோவாக அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதனால் நன்றாக சென்று கொண்டிருந்த கவுண்டமணியின் திரை வாழ்வு சற்று சறுக்கலை சந்தித்தது. இதே போன்ற நிலைமை ஹீரோவாக நடிக்கும் நடிகர் சூரிக்கு வந்துவிடாமல் இருக்க வேண்டும்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை