கோலாகலமாக நடந்த திருமண கொண்டாட்டம்.. கை மேல் லாபம் பார்த்த தமாஷ் நடிகர்

இப்போதெல்லாம் ஏதாவது ஒரு போட்டோவை செலிபிரிட்டிகள் வெளியிட்டாலே அது வைரலாகி வருகிறது. அதே போல் அதிக அளவு ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.

அதனாலேயே பல பிரபலங்கள் சோசியல் மீடியாவில் போட்டோக்களை போட்டு லாபம் பார்த்து வருகின்றனர். இதன் மூலம் லட்சக்கணக்கில் கல்லாகட்டும் நடிகைகளும் இருக்கிறார்கள்.

அது மட்டுமா வீட்டில் நடக்கும் விசேஷங்கள், திருமண கொண்டாட்டங்கள் என அனைத்தையும் வைத்து காசு பார்த்து விடுகின்றனர். அப்படித்தான் சமீபத்தில் காமெடி நடிகர் வீட்டில் நடந்த திருமண கொண்டாட்டம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

ஊரைக்கூட்டி பிரம்மாண்டமாக மகள் கல்யாணத்தை நடத்தி இருக்கிறார் அந்த நடிகர். இந்த அளவுக்கு எதிர்பார்க்காத பலரும் இதற்கு எவ்வளவு செலவு ஆகி இருக்கும் என வெளிப்படையாக பேசியும் வருகின்றனர்.

ஆனால் உண்மையில் செய்த செலவுக்கு மேல் அவருக்கு லாபம் தான் கிடைத்திருக்கிறதாம். அதிலும் மொய் பணமே சில கோடிகள் தேறும் என்கின்றனர். அந்த அளவுக்கு அவர் பிரபலங்களை கூட்டி சீரும் சிறப்புமாக திருமணத்தை நடத்தி விட்டார்.

மேலும் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள், திருமணத்திற்கு அடுத்து விருந்து என அனைத்துமே சோசியல் மீடியா சேனல்களில் உடனுக்குடன் வந்துவிட்டது. இதன் மூலமும் அவர் கொள்ளை லாபம் பார்த்திருக்கிறார்.

இப்படியாக கைமேல் பலனை பார்த்துள்ள நடிகரை பற்றிய பேச்சு தான் இப்போது திரை உலகில் ஓடிக்கொண்டிருக்கிறது. நடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் இதையே பிசினஸ் ஆக பார்த்து கல்லா கட்டி விட்டார் இந்த காமெடி நடிகர்.

 

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய செய்திகள்