விரக்தியிலிருந்து மீண்டு வந்த விஜய் டிவி நடிகர்.. பாலா, புகழ் போன்றவர்களுக்கு வாழ்க்கை கொடுத்த காமெடியன்

முன்பெல்லாம் சன் டிவி தான் அனைத்து வீடுகளையும் ஆக்கிரமித்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது அதற்கு போட்டியாக பல சேனல்களும் ரசிகர்களை கவர பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் விஜய் டிவி வித்தியாசமான நிகழ்ச்சிகளை களம் இறக்கி பலரையும் கட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.

அதன் மூலம் பிரபலமானவர்கள் தான் பாலா மற்றும் புகழ் இருவரும். விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் இவர்கள் பங்கேற்று இருந்தாலும் குக் வித் கோமாளி தான் இவர்களை ஓவர் நைட்டில் பிரபலமாக்கியது. அதனாலேயே இப்போது இவர்கள் வெள்ளித்திரையிலும் கால் பதித்து நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read: கொக்கி குமாரிடம் மாட்டிக் கொண்ட இனியா.. ஆக்ஷன் கிங் ஆக மாறிய விக்ரம்

ஆனால் இவர்களின் ஆரம்ப காலகட்ட வாழ்க்கை கஷ்டம் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது. அதிலும் விஜய் டிவிக்கு வந்த புதிதில் இவர்கள் வாய்ப்புக்காக பல சமயங்களில் கஷ்டப்பட்டு இருக்கின்றனர். அப்போதெல்லாம் இவருக்கு தாடி பாலாஜி தான் பக்க பலமாக இருந்து கை தூக்கி விட்டிருக்கிறார்.

விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் நடுவராக இருக்கும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து இவருக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளும் இருந்திருக்கிறது. மனைவியுடன் கருத்து வேறுபாடு, விவாகரத்து என இவர் பல சர்ச்சைகளிலும் சிக்கி இருந்தார்.

Also read: திருமணம் நடத்தாமலேயே குடித்தனம்.. பிக்பாஸ் பிரபலத்தை சந்தி சிரிக்க வைத்த மனைவி

ஆனால் இப்போது அவர் அதில் இருந்து மீண்டு வந்து விட்டாராம். அது மட்டுமல்லாமல் இவர் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று விரும்பும் விஜய் டிவி பிரபலங்களுக்கு பல வழிகளில் உதவியும் செய்து வருகிறாராம். இதை பாலா மற்றும் புகழ் இருவரும் பல சமயங்களில் மேடைகளில் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் பொருளாதாரம் ரீதியாக அவர்களுக்கு காசு, பணம் துணி என பல உதவிகளை செய்து இருவரையும் உயர்த்தி இருக்கிறார். அந்த வகையில் இப்போது புகழ் படு பிஸியான காமெடியனாக மாறி இருக்கிறார். அதேபோன்று பாலாவும் படங்கள் மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Also read: எவ்வளவு பட்டாலும் திருந்தாத ஐஸ்வர்யா.. பேராசையால் இழந்து தவிக்கும் கண்ணன்

- Advertisement -spot_img

Trending News