1000 எபிசோடை கடந்த பக்தி தொடர்.. விஜய் டிவியை ஓரம் கட்டிய பிரபல சேனல்

சின்னத்திரை மெகா தொடர்களில் ஆயிரம் எபிசோடை கடந்தும் ஒரு சில தொடர்கள் மட்டுமே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும். அந்த வகையில் புது முகங்களைக் கொண்டு பக்தி தொடராக எடுக்கப்பட்ட ஒரு தொடர் ஆயிரமாவது எபிசோடை எட்டி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் கதைக்களமும், நடிகர்களின் தேர்வும் தான்.

கடந்த சில வருடங்களுக்கு முன் தான் ஒளிபரப்பை தொடக்கி தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்த தொலைக்காட்சி கலர்ஸ் தமிழ். இந்த தொலைக்காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது.

அந்தவகையில் கலர்ஸ் தொலைக்காட்சியில் பக்தி தொடராக ஒளிபரப்பாகி வரும் தொடர் அம்மன். இத்தொடரின் முதல் சீசன் மக்களின் வரவேற்பை பெற்றதால் இதைத்தொடர்ந்து அம்மன் சீசன் 2 ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இத்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 6.30 இருக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இத்தொடரில் அமல்ஜித், பவித்ரா கௌடா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஜெனிஃபர், அவினாஷ், சுபா ரக்ஷா, அனிதா நாயர், அழகப்பன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் அண்மையில் பிரபல சீரியல் நடிகை நிவிஷா மற்றொரு நாயகியாக இணைந்துள்ளார்.

அம்மன் தொடரில் எதிர்காலத்தை முன்கூட்டியே அறியும் ஆற்றலைக் கொண்ட ஒரு பெண், மருத்துவரான ஈஷ்வரைக் காதலிப்பது போன்ற கதைக்களத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தொடர்களில் அதிகம் ரசிகர்கள் பார்க்கும் தொடரில் அம்மன் தொடரும் ஒன்று.

பல வருடமாக சீரியல் நடத்தி வரும் விஜய் டிவி கூட 1000 எபிசோடு கடந்து உள்ளதா என்பது தெரியவில்லை. ஆனால் குறைந்த நேரத்திலேயே கலர்ஸ் டிவி 1000 எபிசோடுகளை கடந்துள்ளது. இதனால் தற்போது சீரியலில் பணியாற்றிய அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அம்மன் தொடர் 700 எபிசோடை கடந்தபோது பிரமாண்டமாக கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
தற்போது இந்த தொடர் 1000 எபிசோடை தொட்டுள்ளது. இதனால் வெற்றிகரமாக 1000 எபிசோடுகளை கடந்த தொடர்களில் அம்மன் தொடரும் இணைந்துள்ளது. இத்தொடர் குழுவிற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை