Bigg Boss Season 7 Promo: விஜய் டிவியில் இதுவரை நடந்த பிக் பாஸ் சீசன்களிலேயே இப்போ வந்த பிரமோ தான் வெறித்தனமாக இருக்கிறது. அதாவது இதுவரை சின்ன வீட்டில் இருப்பவர்கள் எந்த கேம் ஷோவிலும் கலந்துக்க கூடாது என்று அவர்களை பெரிய வீட்டிலிருந்து ஒதுக்கி வைத்திருந்தார்கள். ஆனால் தற்போது பிக் பாஸ் குருநாதர் அறிவித்த கேம் இரண்டு வீட்டு போட்டியாளர்களுமே கலந்து கொண்டு விளையாட வேண்டும் என்று கூறியது.
அதன்படி குருநாதர் அறிவித்த கேம் என்னவென்றால் ஆக்சிசன் எமர்ஜென்சி கேம். அதாவது விளையாட்டு மைதானத்தில் ஒரு பாக்ஸில் நிறைய ஆக்சிஜன் சிலிண்டர் வைக்கப்பட்டிருக்கும். அதை எந்த போட்டியாளர்கள் அதிகமாக எடுத்து வைக்கிறார்களோ அவர்களை இந்த டாஸ்க்கில் வின்னர் ஆவார்.
அத்துடன் மற்றவர்கள் ஆக்சன் சிலிண்டரை வைத்திருந்தாலும் அவர்களிடம் இருந்து புடுங்கி கூட வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லி இருந்தது. அதன்படி அனைவரும் ஆக்சிஜன் சிலிண்டரை கைப்பற்றுவதில் வெறித்தனமான விளையாட்டை விளையாண்டு வந்தார்கள். இதில் அதிகமான சிலிண்டரை எடுத்து வைத்து சண்டை போட்டு முட்டிக்கொண்டது விஷ்ணு, பிரதீப், நிக்சன் மற்றும் விக்ரம்.
இதனை அடுத்து ஒவ்வொருவரும் அவர்கள் வைத்திருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை பாதுகாக்க பல வழிகளில் போராடிக் கொண்டு வருகிறார்கள். ஆனால் பிரதிபிடமிருந்து எப்படியாவது எடுத்து விட வேண்டும் என்று மணி அவரை பின்தொடர்ந்து ஓடி வருகிறார். அப்பொழுது பிரதீப் சின்ன வீட்டில் இருக்கும் கண்ணாடியை பார்க்காமல் அப்படியே அதில் புகுந்து விடுகிறார்.
இதனால் அங்குள்ள கண்ணாடி சல்லி சல்லியா நொறுங்கி விட்டது. இதனால் பிரதீபுக்கும் உடம்பில் அடிபட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து விளையாட்டில் போக்கஸ் பண்ணினார். இருந்தாலும் இவர்களுடைய விளையாட்டு ரொம்பவே விபரீதமாக போய்க் கொண்டிருப்பதால் பிக் பாஸ் குருநாதர் தற்காலிகமாக இந்த கேம் ஷோ நிறுத்தப்பட்டு இருக்கிறது என்று அறிவிப்பு கொடுத்திருக்கிறார்.
எல்லாத்தையும் கூட்டிட்டு வந்து சோறு போட்டது ஒரு குத்தமாடா என்று பிக் பாஸ் மைண்ட் வாய்ஸ் நல்லாவே கேட்கிறது. எங்களுக்குள்ள சண்டை சச்சரவை உருவாக்கி அதில் குளிர்காய நினைத்தீர்களே பிக் பாஸ், ஆனால் இப்போது உங்களுடைய முதலுக்கே மோசம் ஆகிவிட்டதே என்று தரமான சம்பவத்தை பிக் பாஸ் போட்டியாளர்கள் செய்து விட்டார்கள். அந்த வகையில் தற்போது வெளிவந்த பிரமோ சும்மா வெறித்தனமாக இருக்கிறது.