வயதான கணக்கு வாத்தியாரா இருப்பாரோ? விக்ரமின் வித்தியாச கெட்டப்பில் வெளியான கோப்ரா பட புதிய போஸ்டர்

சீயான் விக்ரம் நடிக்கும் கோப்ரா படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது. அதற்காகவே மூன்று மொழி மக்களுக்கும் தெரியும் வண்ணம் கோப்ரா என ஒரே தலைப்பை படக்குழு வைத்திருக்கிறது.

கடினமான உழைப்பாளியான விக்ரமுக்கு அண்மை காலத்தில் எந்த படமும் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. அதேநேரம் அவரது படங்கள் ஒவ்வொன்ருமே அவரை தனித்துவமாக நிலைநிறுத்துகின்றன. வசூல் நிலவரம் தான் கவலை அளிக்கிறது.

எனவே இந்த கோப்ரா திரைப்படம் அதை மாற்றும் என நம்பலாம். விக்ரம் இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார். கோப்ரா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் முன்னதாக 7 கெட்டப்புகளில் கோப்ரா படத்தின் முதல்பார்வை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோப்ரா படக்குழுவினர் கோப்ரா படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.

இந்நிலையில் நாளை காலை 10.32 மணிக்கு கோப்ரா படத்தின் டீசர் வெளியாக உள்ளதாம். இந்த அறிவிப்பை விக்ரம் வயதான கதாபாத்திரத்தில் இருக்கும் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளனர்.

cobra-teaser-time-announcement
cobra-teaser-time-announcement
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்