முதல்வர் ஆவதற்கு அதிர்ஷ்டம் தேவை.. எடப்பாடியாரின் ஆவேச பிரச்சார பேச்சு!

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் ஊர் ஊராக சென்று தனது கட்சியான அதிமுகவிற்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதேபோல் போகின்ற இடம் எல்லாம் தமிழ் மக்களுக்கு நலம் தரும் பல வாக்குறுதிகளை எடப்பாடியார் வழங்கி வருவதால், மக்களிடையே  அமோகமான வரவேற்பு முதல்வருக்கு கிடைத்து வருகிறது.  அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வெளியான அதிமுகவின் தேர்தல் அறிக்கை பல்வேறு  தரப்பினரிடமிருந்தும் பாராட்டை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் மொரப்பூர் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடியார் எதிர்க்கட்சியை காரசாரமாக விளாசியுள்ளார்.

மேலும் எடப்பாடியார் முதல்வராக ஆவதற்கு கட்டாயமாக அதிர்ஷ்டம் தேவை என்றும், எதிர்க்கட்சிக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார். முதல்வரின் இந்த ஆவேசமான பிரச்சார பேச்சு தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -