சித்தாவை பல கோடி கொடுத்து வாங்கிய விஜய் டிவி.. ஓடிடியில் கல்லா கட்ட ரிலீஸ் எப்போது தெரியுமா?

Chitta Movie: சமீபத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு போட்டியாக லாரன்ஸ் நடிப்பில் உருவான சந்திரமுகி 2 மற்றும் ஜெயம் ரவியின் இறைவன் படங்கள் வெளியாகி இருந்தது. இந்த இரண்டு படங்களுக்குமே பிரமோஷன் படு பயங்கரமாக நடந்தது.

ஆனால் எதிர்பார்த்த அளவு இந்த படங்கள் போகாமல் மண்ணைக் கவ்வியது. இதை அடுத்து சத்தமே இல்லாமல் வந்த சித்தா படம் ரசிகர்களை பெரும் வாரியாக கவர்ந்தது. அதுவும் குழந்தைகள் இப்போது எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை இயக்குனர் தெளிவாக காட்டி இருந்தார். அதோடு மட்டுமல்லாமல் பெற்றோர்களுக்கான படமாக சித்தா படம் அமைந்திருந்தது.

இதுவரை சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்த சித்தார்த் சமூக அக்கறை கொண்ட படத்தை தேர்ந்தெடுத்து நடித்திருந்தார். அதோடு மட்டுமல்லாமல் சித்தா படத்தை பிரமோஷன் செய்யும்போது கர்நாடகாவில் மிகப்பெரிய பிரச்சனை வெடித்தது. இதற்காக அங்குள்ள பெரிய நடிகர்கள் மன்னிப்பு கேட்டிருந்தனர்.

மேலும் சித்தா படம் திரையரங்குகளில் வசூல் வேட்டையாடிய நிலையில் இப்போது ஓடிடிக்கு வருகிறது. அதாவது சந்திரமுகி 2 மற்றும் இறைவன் போன்ற பிரம்மாண்ட படங்களை ஓரம் கட்டிய சித்தா சிறு பட்ஜெட்டில் தான் எடுக்கப்பட்டது. தியேட்டரிலேயே நல்ல லாபத்தை தயாரிப்பாளருக்கு வாங்கி கொடுத்து விட்டது.

இதுபோக சித்தா படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி பெற்றிருக்கிறது. மேலும் ஓடிடியில் ஹாட்ஸ்டார் வெளியிட இருக்கிறது. மேலும் 15 கோடி கொடுத்து சித்தா படத்தை விஜய் டிவி கைப்பற்றி இருக்கிறது. அடுத்த வாரம் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு சித்தா படம் ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் அடுத்த மாதமே விஜய் டிவி தொலைக்காட்சியிலும் சித்தா படம் ஒளிபரப்பாக இருக்கிறது. ஆகையால் திரையரங்குகளில் தவறவிட்ட ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறையாவது சித்தா படத்தை பார்க்க வேண்டும். அந்த அளவுக்கு சமூக அக்கறை கொண்ட சரியான நேரத்தில் இயக்குனர் சித்தா படத்தை கொடுத்ததற்கு பாராட்டுக்கள்.