சித்தி 2 சீரியல் ராதிகாவுக்கு பதில் இந்த முன்னணி நடிகையா? காசை வாரி இறைக்கும் சன் டிவி

சினிமாவை தொடர்ந்து சமீபகாலமாக ஏற்கனவே ஹிட்டடித்த சீரியல்களின் இரண்டாம் பாகங்கள் தற்போது தமிழ் தொலைக்காட்சிகளில் அதிக அளவில் தொடங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று செம ஹிட் அடித்த சித்தி சீரியல் இரண்டாம் பாகம் சமீபத்தில் தொடங்கி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆனால் முதல் பாகத்தைப் போல இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக இல்லை என்ற பேச்சுகளை தொடர்ந்து இருந்து வந்தன.

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக ராதிகா அந்த சீரியலில் இருந்து விலகினார். சித்தி என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது ராதிகா தான். ஆனால் அவரே விலகிய பிறகு அந்த சீரியலில் என்ன இருக்கப்போகிறது? என ரசிகர்கள் இப்போதே யோசிக்கத் தொடங்கி விட்டனர்.

அதற்கெல்லாம் கேப் கொடுக்க கூடாது என ஏற்கனவே சன் டிவி சீரியல்களில் பணியாற்றிய தமிழ் சினிமாவின் முன்னாள் முன்னணி நடிகைகளை கொண்டுவரலாம் என சன் டிவி முடிவு செய்துள்ளதாம். அந்த வகையில் சன் டிவியின் முதல் சாய்ஸ் தங்கவேட்டை ரம்யா கிருஷ்ணன் தான்.

ramya-krishnan-cinempettai
ramya-krishnan-cinempettai

இவர் ஏற்கனவே சன் டிவியில் சில சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது சன் டிவி நிறுவனம் ரம்யா கிருஷ்ணனிடம் சித்தி 2 சீரியலுக்காக பெரிய அளவு சம்பளம் பேசி வருகிறதாம். அப்படி ஒரு வேலை ரம்யா கிருஷ்ணன் மிஸ் ஆனாலும் அடுத்ததாக நடிகை மீனாவை தேர்வு செய்து கொள்ளலாம் என ஆப்சன் வைத்துள்ளார்களாம்.

meena
meena

இதனால் சித்தி 2 சீரியலில் அடுத்ததாக எந்த நடிகை நடிக்கப் போகிறார் என்பது தாய்மார்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. யாருமே ஒத்துவரவில்லை என்றால் சித்தி 2 சீரியலை இழுத்து மூடவும் அதிக வாய்ப்பு இருக்கிறதாம்.