மாஸ்டர் ரீமேக்கில் நடிச்சே ஆகணும்.. அடம்பிடிக்கும் நடிகர்.. ஸ்டார்லாம் மாஸ்டர் ஆகமுடியுமா சார்

நீண்டநாட்களுக்கு பிறகு தெலுங்கு சினிமாவில் விஜய் முருகதாஸ் கூட்டணியில் உருவான கத்தி படத்தின் ரீமேக்கான கைதி150 படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தவர் சிரஞ்சீவி. படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பியது. தமிழில் வந்த கத்தி படத்திற்கும் தெலுங்கில் வந்த கைதி150 படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.

பல காட்சிகளை கமர்ஷியலாக மாற்றி வெற்றி கண்டனர். இந்நிலையில் சிரஞ்சீவி விஜய்யின் அடுத்த சூப்பர்ஹிட் படத்திற்கு கூறி வைத்துள்ளாராம். சமீபகாலமாக விஜய் நடிக்கும் படங்கள் தமிழைப்போலவே தெலுங்கிலும் நேரடியாக வெளியாகி வருகின்றன. அதிலும் மெர்சல், பிகில், மாஸ்டர் படங்கள் தெலுங்கு சினிமா உலகில் நல்ல வசூலைப் பெற்றது குறிப்பிட வேண்டிய ஒன்று.

முதலில் தெலுங்கு மார்க்கெட் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த விஜய்க்கு இந்த படங்களின் மூலம் கிட்டத்தட்ட 30 கோடி வரை வியாபாரம் உருவாகியுள்ளது. இதனால் இனி விஜய் விருப்பப்பட்டாலும் விருப்பப்படவில்லை என்றாலும் விஜய்யின் படங்கள் நேரடியாக தெலுங்கில் வெளியாவது விதி.

இந்நிலையில்தான் சிரஞ்சீவி சின்ன குழந்தை போல அடம்பிடிக்கும் செய்தி வெளிவந்துள்ளது. சமீபத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தை பார்த்த சிரஞ்சீவி மாஸ்டர் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யலாம் என ஒற்றை காலில் நிற்கிறாராம். எப்படி தெலுங்கில் நேரடியாக வெளியான படத்தை ரீமேக் செய்வது என கேட்டால் தெலுங்குக்கு ஏற்றபடி சில மசாலாக்களை சேர்த்து பரிமாறி விடலாமென இயக்குனர்களுக்கு ஐடியா கொடுத்து வருகிறாராம். மொட்டை கிணறு என தெரிஞ்சும் குதிக்க ரெடியாக இருக்கும் தயாரிப்பாளரை தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.

vijay-chiranjeevi
vijay-chiranjeevi

விரைவில் மாஸ்டர் தெலுங்கு ரீமேக் அறிவிப்புகள் வெளி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சிரஞ்சீவி தற்போது கொரடலா சிவா இயக்கத்தில் ஆச்சார்யா எனும் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அஜித்தின் வேதாளம் பட ரீமேக்கிலும் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

- Advertisement -