பிரபல நடிகரிடம் பளார் என அறை வாங்கிய பயில்வான்.. ஓவரா பேசுனா அடிக்காம கொஞ்சுவாங்கலா !

தமிழ் சினிமாவை பொறுத்தவரை எப்போதுமே ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் உள்ளது போல் கதையை அமைத்திருப்பார்கள். அப்படி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிரஞ்சீவியுடன் பிரபலம் ஒருவர் அடி வாங்கியதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் யார் என்பதை பார்ப்போம்.

சண்டை நடிகர்கள் என்றாலே பல கஷ்டங்களை தாண்டி அவர்களுக்கு உடம்பில் அடிபடுவது இயல்பு அப்படி அடிபட்டாலும் தாங்கிக் கொள்ள வேண்டும், வலி ஏற்பட்டாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பது இவர்களுடைய கொள்கை என்று கூறலாம்.

சினிமாவில் உண்மையாக நடிக்க கூடியவர்கள் இவர்கள் என பல நடிகர்களும் பெருமிதமாக கூறியுள்ளனர். அப்படி அந்த காலத்தில் பயில்வான் ரங்கநாதன் உடம்பிற்கு பெயர் போனவர்.

chiranjeevi-cinemapettai
chiranjeevi-cinemapettai

இவர் படங்களில் காமெடி காட்சிகளில் நடித்திருந்தாலும் இவர் நடித்த சண்டைக் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தன்னுடைய பாடிபில்டிங் மூலம் சினிமாவிற்குள் வந்த இவர் பல சண்டை காட்சிகளில் நடித்துள்ளார்.

பின்பு அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்தார். இவர் ஒரு முறை சூட்டிங் போகும்போது ஒரிஜினல் ஆகவே தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆன சிரஞ்சீவிடம் அடி வாங்கி உள்ளார்.

சென்னை 600028 படத்தில் ஜெய் எப்படி பாத்ரூமில் போய் அழுது கொள்வாரோ அதேபோல் பயில்வான் ரங்கநாதன் ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு வெளியே வந்து தேம்பித் தேம்பி அழுதுள்ளார். அதை பார்த்த பாரதிராஜா யோ அழுகிற உடம்பா இது என அவரை தேற்றியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்