வாய்க் கொழுப்பால் மாட்டிக்கொண்ட சிரஞ்சீவி.. பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்ட அமீர்கான்

பாலிவுட் நடிகர் அமீர் கான் தற்போது லால்சிங் சத்தா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நாக சைதன்யாவும் நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி பான் இந்திய மொழிப் படமாக வெளியாக உள்ளது. தெலுங்கில் இப்படத்தை சிரஞ்சீவி வெளியிட்டார்.

இந்நிலையில் அமீர்கான் மற்றும் சிரஞ்சீவி இடையே கேள்வி பதில் பகுதி இடம்பெற்றிருந்தது. அப்போது சிரஞ்சீவி அமீர்கானுடன் சில கேள்விகள் கேட்டிருந்தார். அதில் சிரஞ்சீவி எப்போது தெலுங்கு படத்தில் நடிப்பீர்கள் என்று அமிர்கான் இடம் கேட்டு இருந்தார்.

இப்போது அமீர்கான் தெலுங்கு படங்களில் நடிக்க தனக்கு ஆசை இருப்பதாக கூறினார். மேலும் தற்போது சிரஞ்சீவி மலையாள படமான லூசிபர் படத்தின் ரீமேக்கான காட்பாதர் படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சல்மான்கான் நடித்துள்ளார்.

அதைக் குறிப்பிட்டு அமீர்கான் காட்பாதர் படத்தில் என்னை அழைப்பதற்கு பதிலாக சல்மான்கானை அழைத்து நடிக்க வைப்பதற்கான காரணம் என்ன என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சிரஞ்சீவி, காட்பாதர் படத்தில் சல்மான்கான் நடித்த கதாபாத்திரத்திற்கு கட்டுமஸ்தான உடம்பு மற்றும் உயரமான மனிதர் தேவைப்பட்டார்.

அதனால்தான் சல்மான்கானை தேர்ந்தெடுத்தேன். மேலும் அமீர்கான் போன்று மூளைக்கு வேலை கொடுக்கும் நடிகர் தேவைப்படவில்லை என சிரஞ்சீவி கூறியிருந்தார். இது தற்போது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. அதாவது அமீர்கான் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு கட்டுமஸ்தான உடலும், உயரமும் இல்லையா என கூறி வருகின்றனர்.

மறுபக்கம் சல்மான் கானுக்கு நடிக்க தெரியாதா, மூளை இல்லையா என அவரது ரசிகர்கள் சிரஞ்சீவியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விளையாட்டாக ஆரம்பித்த இந்த கேள்வி, பதில் தற்போது இணையத்தில் வெளியாகி அமீர்கான் ரசிகர்கள் மற்றும் சல்மான்கான் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.