கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தமிழக முதல்வர்.. பொது மக்களுக்கு வைத்த அன்பான வேண்டுகோள்!

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. இவரது நலத் திட்டங்களால் தற்போது தமிழகம்  இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.

மேலும் தமிழகத்தில் உள்ள ஏழை எளியோரின் நலனுக்காக பல நலத் திட்டங்களை தமிழக முதல்வர் வகுத்து அதனை செயல்படுத்தி வருகிறார். அது எவ்வாறெனில் சமீபத்தில் விவசாய கடன் ரத்து, நகை கடன் தள்ளுபடி,  வருடத்திற்கு ஆறு இலவச சிலிண்டர்கள், குடும்பத் தலைவிக்கு மாதம் 1,500 ரூபாய் என பல திட்டங்களை அறிவித்துள்ளார்.

இதனால் சாமானிய  மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்து வருவதோடு தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தமிழக முதல்வருக்கு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் பொதுமக்கள் அனைவருக்கும் வழிகாட்டும் வகையில் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது உலகத்தையே உலுக்கிய கொடிய நோயான கொரோனா வைரஸ் நோய்க்கு தற்போது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டுக்கொண்டார்.

அதுமட்டுமில்லாமல், பொது மக்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அன்போடு வேண்டுகோள் வைத்துள்ளார்.

Stay Connected

1,170,254FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -