கண்ணீர் மல்க பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.. பெண் குலத்தை  இளக்காரமாக பேசுபவர்களுக்கு தண்டனை உறுதி

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி, ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் முதல்வர் எடப்பாடியார் ஊர் ஊராக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

மேலும் எடப்பாடியார் பல நலத் திட்டங்களை தமிழக மக்களின் நலனுக்காக வகுத்துள்ளதை அறிந்த தமிழக மக்கள் அனைவரும் அவருக்கு போகுமிடமெல்லாம் அமோக வரவேற்ப்பை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருவொற்றியூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடியார் பெண்குலத்தை இழிவாக பேசினாலும், தாயை இழிவாக பேசினாலும் ஆண்டவன் நிச்சயமாக அதற்குரிய தண்டனையை தருவார் என கண்ணீர் மல்க  பேசியுள்ளார்.

ஏனென்றால் எதிர்க் கட்சியான திமுகவினர் அரசியல் மாண்பு இல்லாமல் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஆ ராசா முதல்வரை தரக்குறைவாக பேசியதோடு, ஒரு கூட்டத்தில் ஸ்டாலின் நல்ல உறவில் பிறந்தவர் ஆனால் எடப்பாடி பழனிசாமி கள்ள உறவில் பிறந்தவர் என்ன பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு  பதில் கொடுக்கும் வகையில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள்  திருவொற்றியூரில் நடைபெற்ற பிரச்சாரத்தின்போது, ‘ஒரு சாதாரண மனிதன் முதல்வரானால் எப்படி கீழ்த்தரமாக பேசுவார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், முதல்வராக இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பார்கள் என்றும், இது போன்றோர் ஆட்சிக்கு வந்தால் தாய்மார்களின் நிலை என்னவாகும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் பேசிய எடப்பாடியார் தாய்மார்களை கொச்சைப்படுத்தி பேசுவது, இழிவுபடுத்தி பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தக்க தண்டனையை வழங்க வேண்டும் என்றும், என்னுடைய தாயை பற்றி இழிவாக தரக்குறைவாக பேசியவர்கள் அனைவருக்கும் ஆண்டவன் நிச்சயமான தண்டனையை தருவார் என்றும், இது போன்றோர் ஆட்சிக்கு வந்தால் எப்படி அராஜகம் செய்வார்கள் என்று பெண்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இறுதியாக ஏழையாக இருந்தாலும் பணக்காரராக இருந்தாலும் தாய் தான் எல்லாவற்றிலும் உயர்ந்தவர் என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று எடப்பாடியார் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்