வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஜீரணமான சிரஞ்சீவி கொடுத்த விருந்து.. கூலி பட கேப்பில் லோகேஷ் கனகராஜ் அடித்த விசிட்

வேட்டையன் படத்தை முடித்த கையோடு ரஜினிகாந்த், கூலி படத்தில் பிசியாக இறங்க உள்ளார். இந்த படம் 2025 தீபாவளி ரிலீஸ் என்று கூறுகிறார்கள். ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் கார்டு வெளியீடு அனைவரையும் கவர்ந்து விட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக இது லோகேஷ் படம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு எகிரி உள்ளது.

லியோ படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டது. 2017ஆம் ஆண்டு மாநகரம் படத்தில் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் கொடுத்ததால் இன்று கோடம்பாக்கத்தில் மட்டுமல்லாது, பாலிவுட்டிலும் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக வலம் வருகிறார்.

இப்பொழுது ரஜினியின் கூலி படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் அதிரி பதிரி ஹிட் அடித்தது. கிட்டத்தட்ட 450 கோடிக்கு மேல் அந்த படம் வசூல் சாதனை செய்தது. இதனால் கமல் அவருக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசளித்தார்.

கூலி பட கேப்பில் லோகேஷ் கனகராஜ் அடித்த விசிட்

விக்ரம் படம் பட்டதொட்டி எல்லாம் பட்டையை கிளப்பியதையொட்டி லோகேஷ் கனகராஜை அழைத்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஒரு விருந்து கொடுத்து அசத்தினார். அந்த விருந்தில் தனது மகனான ராம்சரனுக்கு ஒரு படம் பண்ணுமாறு கேட்டுக் கொண்டார்.

இப்பொழுது கூலி படத்தின் நடுவே ராம் சரணை சந்தித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். அவருக்கு ஒரு ஒன் லைன் ஸ்டோரியும் சொல்லி ஒப்புதல் வாங்கியுள்ளார். ராம்சரண் தற்போது நடித்துவரும் கேம் சேஞ்சர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் உடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிரஞ்சீவி கொடுத்த விருந்து இப்பொழுது தான் ஜீரணமாகிள்ளது

- Advertisement -

Trending News